கசகசா உடன் இந்த பருப்பு… இரவில் ஊறவைத்து காலையில் அப்ளை பண்ணுங்க… முகம் பளிச்சென மாறும்; டாக்டர் தீபா
பாதாம் மற்றும் கசகசா கலந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு பல நன்மைகளை அளித்து, முகத்தை பொலிவாகவும் பிரகாசமாகவும் மாற்ற உதவுகிறது என்கிறார் மருத்துவர் தீபா
Advertisment
பாதாம் கசகசா ஃபேஸ் பேக்கின் நன்மைகள்:
பாதாம் கசகசா ஃபேஸ் பேக் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள், இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, இயற்கையான பொலிவைத் தருகின்றன. கசகசா மற்றும் பாலின் கலவை வறண்ட சருமத்தை நீக்கி, சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. கண்களுக்குக் கீழ் கருவளையங்களைக் குறைக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தாமதப்படுத்த உதவும்.
தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு (100 கிராம்), கசகசா (100 கிராம்), பால்.
Advertisment
Advertisements
செய்முறை:
பாதாம் மற்றும் கசகசா சம அளவு (100கிராம்) எடுத்து வெயிலில் காயவிட்டு, இரண்டையும் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து வைக்கப்பட்டுள்ள பொடியுடன் இரவில் பால் கலந்து மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து, சிறிதளவு பால் கலந்து மிக்சியில் மீண்டும் அரைத்து எடுக்க வேண்டும். இதனை, 60 நாட்கள் முகத்தில் பேஸ் பேக் போல அப்ளை செய்யலாம் என்கிறார் மருத்துவர் தீபா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.