scorecardresearch

யாராவது என்கிட்ட முகப்பரு போறதுக்கு என்ன செய்யனும் கேட்டாங்கனா? விஜே தீபிகா பதில்!

நான் பொதுவா பால், சாக்லேட், இனிப்புலாம் சாப்பிட மாட்டேன். அதனால எனக்கு பெரிசா தெரியல. ஆனா சிக்கன் சாப்பிடக்கூடாது சொன்னது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது- விஜே தீபிகா!

யாராவது என்கிட்ட முகப்பரு போறதுக்கு என்ன செய்யனும் கேட்டாங்கனா? விஜே தீபிகா பதில்!
This is how I came out of the acne problem; VJ Deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இப்போது தீபிகா, ஜீ தமிழ் டிவியின் சித்திரம் பேசுதடி சீரியலில் நடிக்கிறார்.

இந்நிலையில், தீபிகா சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் அந்த பேட்டியின் போது தீபிகா பகிர்ந்து கொண்டார்.

ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு தீபிகா அளித்த பேட்டி இதோ!

இப்போ முகப்பரு இல்லாம சருமம் ரொம்ப தெளிவா இருக்கு. அதுக்கு நீங்க என்ன பண்ணீங்க?

இன்ஷியல் டைம்ல முகப்பரு அதிகமா இருக்கும்போது பால், சர்க்கரை, கோதுமை எதுவுமே எடுத்துக்க கூடாது. பிராயிலர் சிக்கன் சாப்பிடக்கூடாது. நாட்டுக்கோழி வேணா சாப்பிடலாம். சாதம் கூட, வெள்ளை அரிசி இல்லாம பிரெளன் ரைஸ் எடுத்துக்க சொன்னாங்க.

அதேமாதிரி எல்லா ஜூஸூம் குடிக்கலாம். குறிப்பா எலுமிச்சை ஜூஸ் குடிச்சா அது முகப்பரு வராம உதவும். முட்டையில வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்.  எல்லாம் சாப்பிட்டு பழகிட்டு, இந்த லைஃப் ஸ்டைல் கடைபிடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, ஒரு 3-4 மாசம் இதை ஃபாலோ பண்ணேன். முகப்பரு கம்மியாக ஆரம்பிச்சதும், அவங்களே கொஞ்சகொஞ்சமா எடுத்துக்க சொல்லிட்டாங்க. நான் பொதுவா பால், சாக்லேட், இனிப்புலாம் சாப்பிட மாட்டேன். அதனால எனக்கு பெரிசா தெரியல. ஆனா சிக்கன் சாப்பிடக்கூடாது சொன்னது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது.

சாப்பாடு தவிர ஸ்கின் அப்ளிகேஷன்ஸ் ஏதாவது எடுத்துக்கிட்டீங்களா?

எனக்கு ஆஷா-னு ஒரு டாக்டர் தான் பாத்தாங்க. அவங்களுக்கு பெரிய தேங்ஸ் சொல்லனும். செப்டம்பர்ல எனக்கு முகப்பரும் ரொம்ப அதிகமாகிடுச்சு. அப்போ 11 மணிக்கு மேல நான் ஆன்லைன்ல இருந்தா என்னை கால் பண்ணி திட்டுவாங்க. என்ன தீபிகா? முகப்பரு ஜாஸ்தியா இருக்கு. நீங்க தூங்கமா இருக்கீங்க.. சரியா தூங்கலனாலும் முகப்பரு வரும் சொல்லுவாங்க. அந்தளவுக்கு எனக்கு முகப்பரு கம்மியா ஆகணுங்கிறதுல அவங்க ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாங்க.

இப்போ நம்ம ஸ்கின் ஆயிலா இருந்து, டிரையா மாறுது. லிப்ஸ்லாம் பிரேக் ஆகுதுனா, எந்த லிப் பாம், யூஸ் பண்ணனும் சொல்லுவாங்க. இப்படி மாய்ஸ்சரைசர், பேஸ் வாஷ், சோப் எல்லாமே எனக்கு சொல்லிடுவாங்க. அவங்க சொல்றது மட்டும் தான் நான் ஃபாலோ பண்ணேன். நானா எதுமே பண்ணல.

ரெகுலரா மேக்கப் போடுறதால முகத்துல நிறைய பிரச்சனை வரும். நீங்களும் அதை அனுபவிச்சிருக்கேங்க.. இப்போ என்ன மாதிரி பிரொடக்ட்ஸ் யூஸ் பண்றீங்க?

இப்போ மாய்ஸ்சரைசர், சன்ஸ்கீரின், டோனர் எல்லாம் யூஸ் பண்றேன். மேக்கப் போடுறதுக்கு முன்னாடி, சருமத்தை பாதுகாக்கிற மாதிரி ஒரு லேயர் போட்டு, அப்புறம் மேக்கப் போடுவேன். ஹெவி மேக்கப்பா இருந்தா, வேலை முடிஞ்ச உடனே கலைச்சுடுவேன். அதுபோக, நான் ஃபிரெண்ட்ஸ் ஓட வெளியே போறேனா, அதிகபட்சம் மாய்ஸ்சரைஸர் போடுவேன். சன்ஸ்கீரின் வேணுனா போடுவேன். அப்புறம் காம்பக்ட் பவுடர் மட்டும் போடுவேன். திக் ஐபிரோஸ் பிடிக்கும். அதனால ஐபிரோஸ் பண்ணுவேன். கண்ணுல எதுவுமே போடமாட்டேன். நியூட் ஷேட் லிப்ஸ்டிக். மொத்தமே இந்த 4 பிரொக்ட்ஸ் தான். இதை மட்டும் நான் மெயிண்டேன் பண்ணுவேன்.

அதேமாதிரி ஏதாவது ஷூட்டிங், போட்டோஷூட் அப்போ முடிஞ்ச உடனே மேக்கப் ரிமூவ் பண்ணிடுவேன்.

முன்னாடி கம்மி விலையில இருக்கிற பிரொடக்ட்ஸ் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, இப்போ ஸ்கின்க்கு கொஞ்சம் பாத்து வாங்குறேன். 3000-4000 ரூபாய்னாலும் வேற வழியில்லை. இப்போ வாங்கிடுவேன்.

அந்த ரெண்டு மாசத்துல எனக்கு எல்லாமே வெறுத்துட்டு.. தெரியாம வந்துட்டோமானு தோணும்.. மனம் திறந்த விஜே தீபிகா!

உங்களோட காலை வழக்கம் குறித்து சொல்லுங்க?

எனக்கு உடம்பு ரொம்ப சூடா இருக்கும். அதை கண்ட்ரோல் பன்றதுக்கு காலையில, எழுந்த உடனே, வெந்தயம் போட்டு தண்ணீர் குடிப்பேன். அப்புறம் ரெண்டு அவிச்ச முட்டை, மஞ்சள் கரு இல்லாம வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவேன். அப்புறம் அம்மா, எலுமிச்சை இல்ல ஆரஞ்சு ஜூஸ் போட்டு தருவாங்க. அதை குடிப்பேன். இதுதான் என்னோட காலை வழக்கம்.

ஆனா, இப்போ அம்மா இல்லை. நம்மளே தான் சமைச்சு சாப்பிடுனும். தோசை, இட்லி சாப்பிடுவேன். இல்லன்னா 10 மணிக்கு தான் எந்திக்கிறது. எந்திச்ச உடனே சமையல் தான் பண்ணுவேன். சாதம் தான் வைப்பேன். எனக்கு சாதம் தான் பிடிக்கும், அது சாப்பிட்டா தான் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும். ஸ்கின்க்கு பொறுத்தவரையில, இப்போ முகப்பருவுக்காக, எனக்கு ஃபேஸ் வாஷ் கொடுத்துருக்காங்க. அதுதான் யூஸ் பன்றேன்.

நீங்க முயற்சி செய்த பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபேஸ் மாஸ்க்?

எனக்கு அந்த மாதிரி ரெண்டுமே இல்ல. ஆனா, ஒரு டைம் என் அம்மா, ஏதோ டிவியில பாத்து’ ரெடி பண்ணி கொடுத்தாங்க. அதை போட்ட அப்புறம் எனக்கு முகம் எல்லாம் ஒருமாதிரி ஆயிடுச்சு. அப்புறம் நான் அதை டிரை பண்ணவே இல்ல. அப்புறம் முகப்பரு வந்த பிறகு, டாக்டர் சொல்றதை தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.

மிராக்கிள் மாஸ்க் ஒன்னு கொடுத்தாங்க. அது, மேக்கப் போட்ட அப்புறம், அதை முகத்துல வச்சு, கொஞ்சம் தேய்ச்ச பிறகு கழுவ சொல்லுவாங்க. ஏன்னா நம்ம முகத்துல குட்டிகுட்டி மேக்கப் இருந்தாகூட அது ரிமூவ் பண்ணிடும். ஒரு 2-3 நாள் தொடர்ந்து வேலை செய்யும்போது, இதை யூஸ் பண்ணுவேன். நல்ல இருக்கும்.

நீங்க நிறைய ஸ்கின் பிரச்சனைகள் அனுபவிச்சுருக்கீங்க. இந்த பிரச்னைக்கு, இதை பண்ணுங்கனுநீங்க ஆடியன்ஸூக்கு என்ன சொல்லுவீங்க?

முகப்பரு இருந்த டைம்ல, நான் தேன், தயிருனு நிறைய டிரை பண்ணிருக்கேன். ஆனா எனக்கு ஒன்னுக்கூட வேலை செய்ஞ்சதே இல்ல. சின்ன வயசுல இருந்து எனக்கு ஆயில் ஸ்கின் தான். இப்போதான் டிரிட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் டிரையா ஆகிருக்கு.

அதனால இது பண்ணா சரியாயிடும்னு பர்சனலா எனக்கு எதுவும் இல்ல. அதனால நம்ம உடம்புக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சுட்டு அப்புறமா, டிரிட்மெண்ட் பண்றது நல்லது.

யாராவது என்கிட்ட முகப்பரு போறதுக்கு என்ன செய்யனும் கேட்டாங்கனா, நான் என்னோட டாக்டர் நம்பர் அனுப்பிட்டு, அவங்ககிட்ட பேச சொல்லிருவேன்.

பெஸ்ட் ஹேர்மாஸ்க்?

சின்ன வயசுல இருந்து அம்மா பண்ற ஆயில் தான். அவங்களே செம்பருத்தி, கருவேப்பிலை போட்டு ஹோம்மேட் ஆயில் பண்ணுவாங்க. அதுதான் யூஸ் பண்ணேன். ஆனா, இப்போ ஆயிலி ஸ்கின் இருக்கிறதால, டாக்டர் ஆயில் அதிகமா யூஸ் பண்ணாதீங்கனு சொல்லிட்டார். அதனால இப்போ ஆயில் அப்ளை பன்றதே விட்டுட்டேன். தலைக் கழுவும் போது மட்டும், ஒரு அரை மணிநேரம் முன்னாடி, ஆயில் அப்ளை பண்ணிட்டு உடனே வாஷ் பண்ணிடுவேன். இந்த ஷாம்பூதான் இல்ல. எல்லா பிரொடக்ட்ஸூம் யூஸ் பண்ணுவேன்.

இப்படி விஜே தீபிகா, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் அந்த பேட்டியின் போது தீபிகா பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ இதோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: This is how i came out of the acne problem says vj deepika