சாதாரண மயக்கம் கூட உங்கள் உயிருக்கு ஆபத்தாகலாம்: ஏன் தெரியுமா?

மயக்கம் என்பது இதயம் சரியான அளவு இரத்தத்தை, மூளைக்கு பம்ப் செய்ய முடியாதபோது நிகழ்கிறது.

fainting-heart-health
This is how ordinary dizziness can be life threatening

திடீரென சுயநினைவை இழப்பது பெரும்பாலும் மோசமான உடல்நலம் அல்லது அடிப்படை சுகாதார நிலையைக் குறிக்கிறது. தொடர்ந்து மயக்கம் வருவது இதய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது.

இதயவியல் நிபுணர் டாக்டர் ஜே.கே.பதி கருத்துப்படி, மன அழுத்தம், உணவுப் பழக்கம், தூக்க சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் பிற காரணிகளால் மயக்கம் ஏற்படுகிறது என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது.

இருப்பினும், இந்த பொதுவான நிலை, இதய செயலிழப்புக்கான முதன்மை அறிகுறிகளையும் குறிக்கலாம்.

“இது ஆபத்தான காயங்கள் மற்றும் அசாதரண இதய துடிப்பு போன்ற இதய நோய்களின் எச்சரிக்கை அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். இதை மோசமாக்குவது என்னவென்றால், இது வெவ்வேறு வயதினரைப் பாதிக்கிறது. குறிப்பாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்படுகின்றனர்” என்கிறார் மருத்துவர்.

சின்கோப் (syncope) என்றால் என்ன?

மயக்கம் என்பது மருத்துவத்தில் ‘சின்கோப்’ என்று அழைக்கப்படுகிறது. இதயம் சரியான அளவு இரத்தத்தை மூளைக்கு பம்ப் செய்ய முடியாதபோது இது நிகழ்கிறது.

இது அரித்மியாவின் (arrhythmia) எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம், இது அசாதாரணமான இதயத் துடிப்புகளால் ஏற்படுகிறது மற்றும் புறக்கணிக்கப்பட்டால், பக்கவாதம் அல்லது திடீர் மாரடைப்பு போன்ற அபாயகரமான விளைவுகளுக்கு கூட வழிவகுக்கும்.

அது மரணத்தை உண்டாக்குவது எது?

நரம்பியல் பிரச்சினைகளால் மட்டுமே மயக்கம் ஏற்படுகிறது என்று ஒரு பெரிய தவறான கருத்து இருப்பதால், ஒரு சில நோயாளிகள் மட்டுமே முதன்மை நிலைகளில் இருதயநோய் நிபுணரை அணுகுகிறார்கள் என்று மருத்துவர் கூறுகிறார்.

 “கார்டியாக் சின்கோப்” பெரும்பாலும் தலைச்சுற்றல் அல்லது மயக்கத்திற்கு முந்தைய அறிகுறிகள் எதுவும் இல்லாமல், திடீரென்று ஏற்படும்.

மயக்கம் ஏன் ஆபத்தானது என்பதற்கான சில காரணங்கள்:

அரித்மியா: அரித்மியா காரணமாக மயக்கம் ஏற்படலாம், இது மற்ற உடல் பாகங்களுக்கு அசாதாரண இரத்த விநியோகத்தை ஏற்படுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலை பாதிப்பில்லாதது என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பெருந்தமணி துண்டித்தல்: இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரிய தமனியில் பிளவு ஏற்படும் ஒரு அரிய நிலை. அதன் ஆரம்ப அறிகுறிகளில் மயக்கமும் அடங்கும்.

பெருந்தமனி வால்வு சுருக்கம்: பிறக்கும் போது அல்லது வயதான காலத்தில் இதயத்திற்கும், பெருந்தமனிக்கும் இடையே உள்ள வால்வு சுருங்கும் நிலை. பிறக்கும் போது அல்லது வயதான காலத்தில் இதயத்திற்கும் பெருநாடிக்கும் இடையே உள்ள வால்வு சுருங்கும் நிலை.

குறிப்பிடத்தக்க காயங்கள்: மயக்கம் ஏற்பட்டு, கீழே விழும்போது உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காயங்கள் ஆபத்தானவை, குறிப்பாக தலை அல்லது எலும்பில் காயம் ஏற்பட்டால்.

எச்சரிக்கை அடையாளங்கள்

– படபடப்பு

– குமட்டல்

– இருட்டடிப்பு

– லேசான தலைவலி

– திடீர் மயக்கம்

– தலைசுற்றல்

– பலவீனம்

– நிலையற்ற உணர்வு

– பார்வை மாற்றங்கள்

– தலைவலி

– வெளிறிய தோல்

– மூச்சுத்திணறல்

வாழ்க்கை முறை தேர்வுகள், மாற்றங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

1. பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய, மயக்கம் ஏற்படும் போது அதை ரெக்கார்ட் செய்வது இன்றியமையாதது. மயக்கத்தின் எந்த நிகழ்வும் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் தவிர்க்கப்படக்கூடாது.

2. மயக்கம், குமட்டல், கடுமையான பலவீனம், சோர்வு மற்றும் பார்வை மாற்றம் உள்ளிட்ட மயக்கத்திற்கு முந்தைய அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக ஒரு நிபுணரை அணுக வேண்டும்.

3. திடீரென மயக்கம் ஏற்பட்டால், காயங்களைத் தவிர்க்க ஒருவர் உடனடியாக உட்கார வேண்டும் அல்லது படுத்துக் கொள்ள வேண்டும். இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்யும்.

4. வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் மயக்கத்தை நிர்வகிக்கலாம். ஆரோக்கியமான உணவு, சீரான எடை மற்றும் தூக்கம் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம்.

5. இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டின் அசாதாரண நரம்பியல் ஒழுங்குமுறையால் ஏற்படும் இருட்டடிப்பு (blackout)  வழக்கில், அதிக உப்பு உட்கொள்ளல், போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் போன்ற எளிய வீட்டு வைத்தியங்களை ஒருவர் தேர்வு செய்ய வேண்டும்.

6. அசாதாரணமான-மெதுவான இதயத் துடிப்பு (bradycardia) காரணமாக மயக்கம் ஏற்பட்டால், பேஸ்மேக்கர் (pacemaker) செருகுவது பரிசீலிக்கப்படலாம். பேஸ்மேக்கர் என்பது இதயத்திற்கு சக்திவாய்ந்த மின் சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை நிர்வகிக்கப் பயன்படும் ஒரு சிறிய சாதனம்.

7. அதேபோல, அசாதாரண வேகத்தில் (tachycardia), ஐசிடி (ICD- implantable cardioverter-defibrillator) போன்ற சாதனங்கள் நிர்வகிக்க உதவியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This is how ordinary dizziness can be life threatening

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com