நடுரோட்டில் இப்படி ஒரு சர்ப்ரைஸ்.. ஆடி, பாடி கணவனை கட்டிப்பிடித்து தன் கர்ப்பத்தை அறிவித்த ஃபரினா வெண்பா!

சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

Farina Azad
This is how serial actress farina azad revealed her pregnancy to her husband

சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.

டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார்.

ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் பாரதியின் தோழியாக, டாக்டர் வெண்பாவாக வரும் இவரது கதாபாத்திரம் அவரை தமிழ் சீரியல் உலகில், நம்பிக்கைக்குரிய எதிரிகளில் ஒருவராக்கியது.

29 வயதான ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

தன் கர்ப்பத்தை வெளி உலகத்துக்கு அறிவித்தது முதல், தான் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா, தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலும் கர்ப்ப காலத்தில்’ ஃபரினா எடுத்த சில போட்டோஷூட்கள் பல விமர்சனங்களையும் கிளப்பியது. . ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஃபரினா வழக்கம்போல மாடலிங், நடிப்பு என ஓடிக்கொண்டே இருந்தார். 

இந்நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஃபரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் எட்டி அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பது போல், தன்னுடைய ஒரு மாதமே ஆன குழந்தைக்கு சயன் லாரா ரஹ்மான் என பெயரிட்டு, விதவிதமாக போட்டோஷூட்கள் எடுத்து’ அதையெல்லாம் ஃபரினா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாமே பயங்கர வைரலாகியது.

இப்போது ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் ஃபரினா தான் கர்ப்பமாக இருப்பதை, தன் கணவர் உபையாத்துக்கு சாதரணமாக தெரிவிக்காமல், ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து அதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில் இருவரும் ஏதோ ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்தவுடன், சில இளைஞர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆடத் தொடங்குகின்றனர். ஃபரினா சந்தோஷத்தை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார், ஆனால், உபையாத் எதுவும் தெரியாமல், எதற்காக இந்த சர்ப்ரைஸ் என வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது, ஃபரினா தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த பிரக்னன்சி கிட்-ஐ உபையாத்திடம் காட்ட, அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பூரித்து, சந்தோஷத்தில் திக்குமுக்காடி போகிறார். பிறகு, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து, முத்தங்களை கொடுத்து அன்பை பரிமாறுகின்றனர். அப்போது ஃபரினா நடு ரோடு என பார்க்கமால் சந்தோஷத்தில் தன் கணவனை சுற்றி சுற்றி ஆடுகிறார். அதற்கேற்ற மாதிரி, வீடியோவில் அகலாதே அகலாதே பாடலும், நிறைமாத நிலவே வா வா பாடலும் ஒலிக்கிறது.

”இப்படித்தான் நான் ஜயனை வெளிப்படுத்தினேன்” என குறிப்பிட்டு, இந்த வீடியோவைத் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஃபரீனா.

இந்த வீடியோவை பார்க்கும் போதே ஒருவித ஆனந்தமும், புல்லரிப்பும் ஏற்படுகிறது.  இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் வொவ்வ்வ்வ்.. சூப்பர், அமேசிங், அவ்சம்,.. கியூட் என கமெண்ட்களை அடித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This is how serial actress farina azad revealed her pregnancy to her husband

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express