சீக்கிரம் தூங்க செல்ல வேண்டும். அதுபோல சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் கேள்விபட்டிருப்போம். இந்நிலையில் நமது தூங்கும் முறைக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு.
இந்நிலையில் நாம் சரியாக தூங்கவில்லை அல்லது சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றாலும், நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
நமக்கு சிறுநீரகம் பிரச்சனை இருந்தால், உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தால், தூக்கம் பாதிக்கப்படும். நமது தூக்கத்தை சீராக்கும், மெலடோனின் ஹார்மோன், நமது சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தினமும், 7 முதல் 9 இரவில் தூங்க வேண்டும். தூங்கப்போகும் நேரம் மற்றும் தூங்கி எழும் நேரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தூங்குவதற்கு முன்பாக நாம் காஃபைன் உள்ள பானங்களை எடுத்துகொள்ள கூடாது. குறைந்த அளவு சோடியம் உள்ள உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் எடுத்துகொள்ள கூடாது.
மோசமான மன அழுத்தம் சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தலாம். இந்நிலையில் நாம் உடல் பயிற்சி செய்வதாலும், தியானம், யோகா செய்வதாலும், மன அழுத்தத்தை குறைக்கலாம்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“