/indian-express-tamil/media/media_files/2025/11/02/gas-2025-11-02-16-21-00.jpg)
உங்கள் வீட்டு கேஸ் அடுப்பில் மஞ்சள் தீ எரிகிறதா? அதற்கு காரணம் உங்கள் கேஸ் சிலிண்டர் தீரப்போகிறது என்பதாகும். கேஸ் தீரப்போகும் போது தீ மஞ்சள் நிறத்தில் எரிவதால் உங்கள் பாத்திரம் கருப்பாகிவிடும். பொதுவாக நில நிறத்தில் தீ எரிந்தால் உங்கள் பாத்திரம் கருப்பாகவும் செய்யாது, எரிபொருள் சீக்கிரம் தீர்த்தும் போகாது. அதாவது, எரிபொருள் முழுமையாக எரியாததால், உங்கள் சிலிண்டர் வழக்கத்தை விடச் சீக்கிரமே காலி ஆகிவிடும்.
இதற்கு என்ன காரணம்?
எந்த ஒரு தீயும் முழுமையாக எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. கேஸ் சிலிண்டரிலிருந்து வரும் எரிபொருளும், காற்றும் சரியான அளவில் ஒன்று சேரும்போது, அது முழுமையாக எரிந்து நீல நிறத்தில் ஒளிரும். ஆனால், கேஸ் வரும் அளவிற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், எரிபொருள் பாதியாக எரிந்து மஞ்சள் நிறத் தீயை உருவாக்கும்.
நமது அடுப்புக்கு அடியில், கேஸ் வரும் குழாய்ப் பகுதியில், காற்று உள்ளே செல்வதற்காக இரண்டு சிறிய ஓட்டைகள் வைக்கப்பட்டிருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, அந்த ஓட்டைகளில் தூசி, அழுக்கு, அல்லது பெரும்பாலும் சிலந்தி வலை வந்து அடைத்துக் கொள்ளும். இப்படி அடைத்துக் கொள்வதால், எரிபொருளுடன் கலப்பதற்குத் தேவையான காற்று உள்ளே செல்ல முடியாது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறைதான் மஞ்சள் தீ ஏற்படுத்துகிறது.
இதைச் சரி செய்ய, முதலில் கேஸ் அடுப்பை முழுமையாக அணைத்துவிடுங்கள். அடுப்பு சூடு ஆறிய பிறகு, அடுப்பின் மேலே இருக்கும் ஸ்டாண்ட் மற்றும் பர்னர் இரண்டையும் தனியாக எடுத்துவிடுங்கள். பின்னர் அடுப்பை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று தலைகீழாக திருப்புங்கள். பர்னருக்கு கேஸ் வரும் அந்த குழாய்ப் பகுதியைப் பாருங்கள். அதன் பக்கவாட்டில் இரண்டு காற்று ஓட்டைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
அந்த ஓட்டைகளில் தூசு அடைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஒரு 'டெஸ்டர்' ஸ்க்ரூடிரைவர் அல்லது ஒரு சிறிய குச்சியை வைத்து அந்த ஓட்டைகளுக்குள் விட்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். உள்ளே இருக்கும் எல்லா தூசியையும் முழுமையாக வெளியே எடுத்துவிடுங்கள். இப்படி சுத்தம் செய்வது மிகவும் எளிய வழிமுறையாகும்.
நன்றாகச் சுத்தம் செய்த பிறகு, அடுப்பைப் பழையபடி மாட்டி பர்னர் மற்றும் ஸ்டாண்டை மாட்டிவிடுங்கள். இப்போது அடுப்பைப் பற்ற வைத்துப் பாருங்கள். தீ நல்ல நீல நிறத்தில், அருமையாக எரியும். இனி உங்கள் பாத்திரம் கருப்பாகவும் செய்யாது. எரிபொருளும் நீண்ட நாட்களுக்கு வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us