scorecardresearch

இப்படித்தான் ஃபேஸ் வாஷ் பண்ணனும்.. சீரியல் நடிகை நிவேதிதா பங்கஜ் பியூட்டி டிப்ஸ்!

சரும பராமரிப்பு வரும்போது, வெளியில நம்ம அப்ளை பண்ற மேக்கப் மட்டுமல்லாம, நம்ம என்ன சாப்பிடுறோம் ரொம்ப முக்கியம்- நிவேதிதா பங்கஜ் பியூட்டி டிப்ஸ்!

இப்படித்தான் ஃபேஸ் வாஷ் பண்ணனும்.. சீரியல் நடிகை நிவேதிதா பங்கஜ் பியூட்டி டிப்ஸ்!
Nivethitha Bankaj

வாணி ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதிதா.

நிவேதிதா தன்னுடைய லைஃப்ஸ்டைல் மற்றும் சரும பராமரிப்பு குறித்து, சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு  அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.

முதலில் சரும பராமரிப்பு குறித்து நிவேதிதா பேசுகையில், நடிகைனாலே சருமம் பளபளப்பாக இருக்குனா, அதுல எத்தனையோ பலபல லேயர்கள் இருக்கு. ஆனாலும் சருமம்னு வரும்போது பல பிரச்சனைகள் இருக்கு. சரும பராமரிப்பு வரும்போது, வெளியில நம்ம அப்ளை பண்ற மேக்கப் மட்டுமல்லாம, நம்ம என்ன சாப்பிடுறோம் ரொம்ப முக்கியம்.

சருமத்துக்கு முக்கியமா ஹைட்ரேஷன் தேவை. நான் காலையில எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் என் நாளை தொடங்குவேன். அதுக்கு பிறகுதான் முகம் கழுவுவேன். மைல்ட் கிளென்சர் ஃபேஸ் வாஷ் தான் யூஸ் பண்ணுவேன். அப்புறம் மாய்ஸ்சரைசர், சன்ஸ்கீரின் அப்ளை பண்ணுவேன். இரவுல இதோட ஒரு சீரம், நைட் கிரீம், சேத்துப்பேன். அண்டர் ஐ கிரீம், காலையில, இரவு ரெண்டு நேரமும் யூஸ் பண்ணுவேன்.

பொதுவா நான் டெர்மடாலஜிஸ்ட் பரிந்துரைக்கிற ஸ்கின் கேர் பிரொடக்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவேன். கற்றாழை உண்மையா ஒரு அதிசயமா பிரொடக்ட். எனக்கு அது நல்ல வேலை செய்ஞ்சிருக்கு. இது டேனிங், மாய்ஸ்சரைசிங் ரெண்டுக்குமே ரொம்ப நல்ல இருக்கும்.

உதட்டுக்கும் ஹைப்பர் பிக்மெண்டேஷனுக்கும்  பாலாடை நல்ல வேலை செய்யும்.

எனக்கு பார்லர் போறதுக்குலாம் பொறுமை இல்லை. ஏன்னா ஒவ்வொரு நாளும் ஆள் மாறிட்டே இருப்பாங்க. ஐ பிரோஸ் பண்ணும் போது முகமே மாறிடுது. அதோட 50 ரூபாய்க்கு நம்மளே வீட்டுல பண்றது, பார்லருக்கு போனா 5000 ரூபாய் செலவாகும்.  அதனால நானே வீட்டுல வேக்ஸ் பண்ணிப்பேன். நானே ஐ பிரோஸ் டிரிம் பண்ணிப்பேன்.

முகப்பரு ஒரு யுனிவர்சல் பிரொபிளம். எல்லாருமே அதுக்கூட போராடிட்டு இருக்காங்க. இது ஒரு லைஃப் ஸ்டைல் பிரச்சனை தான். நம்ம என்ன சாப்பிடுறோம். ஹார்மோன்ஸ், மேக்கப் எல்லாமே கலந்தது தான். முகப்பரு வராம நாம தடுக்க முடியாது. ஆனா தழும்பு வராம இருக்க என்னென்ன பண்ண முடியுமோ, அதெல்லாம் பண்ணலாம். எடுத்துக்காட்டா ஹைட்ரேட்டிடா இருக்கிறது.

நிறையபேரு சோம்பேறியா இருக்குனு மேக்கப் ஓட தூங்குவாங்க. அப்படி பண்ணா, உங்க துளைகள் அடைச்சு முகப்பரு வரும். அதனாலா எவ்ளோ டயர்டா இருந்தாலும், ஒழுங்கா ஃபேஸ் வாஷ் பண்ணனும். தேங்காய் எண்ணெய் இல்ல மேக்கப் ரீமுவர்லாம் யூஸ் பண்ணி, மேக்கப் எடுத்ததுக்கு  அப்புறமா ஃபேஸ் வாஷ் பண்ணனும். அப்புறம் நைட் ஸ்கின் கேர் எல்லாம் முடிச்சதுக்கு அப்புறமா தூங்குங்க. உங்க சரும துளைகள் சுத்தமா இருக்கிற மாதிரி பாத்துக்கங்க.

எடுத்த உடனே நேரா போயி பேஸ் வாஷ் பண்றதால எந்த பிரயோஜனும் இல்ல. உங்க ஸ்கின் டைப் தெரிஞ்சு, பவுண்டேஷன் யூஸ் பண்ணனும். ஆயிலி ஸ்கின் இருக்கிறவங்க,, கிரீமியா இருக்கிற பவுண்டேஷன் யூஸ் பண்ணா பருக்கள் வரும். அதனால நம்ம ஸ்கின் டைப் தெரிஞ்சுட்டு மேக்கப் யூஸ், ஸ்கின் பிரொடக்ட்ஸ் யூஸ் பண்றது நல்லது.

பிம்பிள் பேட்ச் ஒன்னு இருக்கு. அது நீங்க பரு மேல வச்சாலே போதும். அதுல வேம்பு, மஞ்சள் இருக்கு. போட்ட உடனே சுருசுருன்னு இருக்கும்m. ஆனா நல்ல வேலை செய்யும். அது ஸ்கின் கலர்ல இருக்கும். அதனால நீங்க வச்சிருக்கிறது வெளியே தெரியாது. அது வச்சுட்டே நீங்க மேக்கப் கூட போடலாம்.

டேனிங் பொறுத்தவரை, எந்த நேரத்துல நம்ம வெளியே போறோம்னு ஒன்னு இருக்கு. சூரிய ஒளி நம்ம மேல கண்டிப்பா படனும். அப்போதான் நமக்கு வைட்டமின் டி கிடைக்கும்.  காலையில சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனம் இந்த ரெண்டு வெயிலுமே நம்ம சருமத்துக்கு ரொம்ப நல்லது. ஆனா, 9 மணிக்கு அப்புறமா வர்ற வெயில் நம்ம சருமத்துக்கு கொஞ்சம் கெடுதல் தான். நம்ம சன்ஸ்கீரின் போடாம வெளியே போகக் கூடாது.

டார்க் சர்கிள் பொறுத்தவரைக்கும், நல்ல தூங்குறதுதான் முக்கியம். சரியா தூங்காம எதுவுமே பண்ண முடியாது. ஆனாலும் நம்மள ஹைட்ரேடா வச்சிக்கிறது, ஐ கிரீம் யூஸ் பண்றது எல்லாம் ரொம்ப முக்கியம்.

இப்படி நிவேதிதாதன்னுடைய லைஃப்ஸ்டைல் மற்றும் சரும பராமரிப்பு குறித்து, சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு  அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ இதோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: This is the right way to wash your face serial actress nivethitha bankaj beauty tips