குளிர்ந்த நீரில் குளிப்பது பொதுவாக பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. இது ஆற்றலை அதிகரிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது போன்ற பலன்களை கொண்டுள்ளது. இருப்பினும், சிலருக்கு குறிப்பாக ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, இந்த நடைமுறை சில ஆபத்துகளையும் கொண்டிருக்கலாம்.
குளிர்ந்த நீரின் புத்துணர்ச்சியூட்டும் விளைவுகள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், இந்த திடீர் வெப்பநிலை மாற்றம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இதய நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம். புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் எதிர்பாராத உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் இருக்க, எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: This is what happens to the body when you take a cold shower
குளிர்ந்த நீர் குளியல் உடலை எவ்வாறு பாதிக்கிறது?
டெல்லி சி.கே. பிர்லா மருத்துவமனையின் டாக்டர் நரேந்திர சிங்லா விளக்குகிறார்: குளிர்ந்த நீர் குளியல் உடலை திடீர் வெப்பநிலை மாற்றங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. இந்த செயல்முறை vasoconstriction என்று அழைக்கப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இதயம் கடினமாக உழைக்க வேண்டிய நிலையை உருவாக்குகிறது.
ஆரோக்கியமான நபர்களுக்கு இந்த விளைவு ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், இதய நோய் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். திடீர் குளிர் அதிர்ச்சி noradrenaline வெளியீட்டைத் தூண்டி, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று டாக்டர் சிங்லா குறிப்பிடுகிறார். இது இருதய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். குளிர்ந்த நீர் குளியல் உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது?
இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பு: குளிர்ந்த நீரில் குளிப்பது இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் வேகமாக அதிகரிக்கும் என்று டாக்டர் சிங்லா விளக்குகிறார். இது உயர் இரத்த அழுத்தம் அல்லது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கு பிரச்னையாக இருக்கலாம். இந்த அதிகரித்த இதய அழுத்தம் மாரடைப்பு அல்லது சீரற்ற இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும்.
ரத்தக்குழாய் சுருக்கம்: டாக்டர் சிங்லா சுட்டிக்காட்டியபடி, குளிர்ச்சியான சூழலுக்கு உடல் இயற்கையாகவே ரத்த நாளங்களை சுருக்கி, உடல் வெப்பநிலையைப் பராமரிக்க முயற்சிக்கும். இதய நோய் உள்ளவர்களுக்கு, இந்த சுருக்கம் இதயம், மூளை போன்ற முக்கியமான பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம். இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
இதயக் குழலிய அமைப்பில் ஏற்படும் அழுத்தம்: மும்பை, பரேலில் உள்ள கிளேனேகிள்ஸ் மருத்துவமனைகளின் உள் மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறியவை; குளிர்ந்த நீர் குளியலால் ஏற்படும் கூடுதல் இதய அழுத்தம், ஏற்கனவே இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கலாம். இந்த அழுத்தம் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு கூட ஏற்பட வழிவகுக்கும்.
இதய நோயாளிகளுக்கான மாற்று அணுகுமுறைகள் என்னென்ன?
இதயப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்ந்த நீர் குளியலுக்குப் பாதுகாப்பான மாற்றுகளை டாக்டர் சிங்லா பரிந்துரைக்கிறார்:
வெதுவெதுப்பான நீர் குளியல்: டாக்டர் சிங்லாவின் கூற்றுப்படி, வெதுவெதுப்பான நீர் இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் ரத்த ஓட்டத்தைத் தூண்டும். இந்த முறை தசைகளைத் தணிக்கவும், மனத் தெளிவை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் குளிர்ந்த நீருடன் தொடர்புடைய அபாயங்கள் இதில் இல்லை.
மாறுபட்ட நீர் குளியல்: வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீரை மாறி மாறிப் பயன்படுத்தும் மாறுபட்ட நீர் குளியலை டாக்டர் சிங்லா பரிந்துரைக்கிறார். இந்த முறை ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இருப்பினும், இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை முயற்சிக்கும் முன் தங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்