சிறுநீர் பரிசோதனை மூலமே இனி புற்றுநோயை கண்டறிய முடியும்

சிறுநீர் பரிசோதனை மூலமே புற்றுநோயை கண்டறியும் விதத்தில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நவீன நானோ ஒயர் கருவியை கண்டறிந்துள்ளனர்.

By: December 28, 2017, 4:21:50 PM

சிறுநீர் பரிசோதனை மூலமே புற்றுநோயை கண்டறியும் விதத்தில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நவீன நானோ ஒயர் கருவியை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், ஆரம்பத்திலேயே புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை அழிக்கவும், சிகிச்சையை துவங்கவும் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கருவியின் மூலம், புற்றுநோய் செல்களின் ஆரம்ப வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“நோய்களை கண்டறிந்து முறையாக நோயாளிகளை கண்காணிக்க, அவர்களது உடலில் ஊடுருவலை அனுமதிக்காத கருவியை கண்டறிவதுதான் கடும் சவாலாக உள்ளது. உதாரணமாக, ஒரு எளிய சிறுநீர் பரிசோதனை உள்ளிட்டவை.”, என இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள நானோ ஒயரானது ஜிங்க் ஆக்சைடுடன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜிங்க் ஆக்சைடு புற்றுநோய் செல்களை எளிதில் கண்டறியும் தன்மை கொண்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:This new nanowire device can detect cancer with a urine test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X