கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதினர் இருவரும் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஃபோட்டோக்கள் பற்றி தான் இணைய ரசிகர்கள் அதிகளவில் பேசி வருகின்றனர்.
காதலர்களாக வலம் வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா கடந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலிக்கும் காலங்களிலியே இந்த ஜோடி குறித்து எந்த செய்தி வெளியானாலும் உடனே வைரலாக மாறி விடும். குறிப்பாக விராட் - அனுஷ்கா இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பலராலும் அதிகளவில் ரசிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடிகள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், போன்ற சமூகவலைத்தளங்களில் ஃபோட்டோ வெளியிடுவதையே வழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த பழக்கத்தை ஆரம்பத்தில் ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கு புகைப்படம் தான் இவ்வலவு விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்க் கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடர்கள் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகின்றன. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சென்ற வண்டியில் அனுஷ்காவும் விராட் கோலியுன் இணைந்து சென்றிருந்தது. கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையிக்ல் இந்த ஜோடிகள் இருவரும் சமூகவலைத்தளங்களில் ஃபோட்டோக்களை பதிவிடுவதற்காகவே மினி ஃபோட்டொ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இந்த ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் அவர்களை கலாய்க்கும் படி கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படத்தில் கோலியும், அனுஷ்காவும் க்யூட்டாக இருந்தாலும், “உங்களின் காதலை வெளிப்படுத்த இருவருக்கும் ஃபோட்டொ போடுவதை தவிர வேறு வேலையே இல்லையா “ என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.