/indian-express-tamil/media/media_files/2025/05/13/pLU0GhIrUnqi30YNnFbP.jpg)
பரம்பரை கொழுப்பு கட்டியை கரைய வைக்கும்... கர்சீப்ல தண்ணி தொட்டு இப்படி தடவுங்க: டாக்டர் தீபா
நவீன மருத்துவத்தில் உடனடி சிகிச்சைகள் பெருகிவரும் நிலையில், பலரும் உடல்நல பிரச்னைகளுக்கு மென்மையான அணுகு முறைகளைத் தேடுகின்றனர். தோலுக்கும் தசைக்கும் இடையில் மென்மையான கொழுப்பு திசுக்களால் உருவாகும் கொழுப்புக் கட்டி (Lipoma). வழக்கமான மருத்துவத்தில் இதற்கு சிகிச்சைகள் இருந்தாலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் கொழுப்புக் கட்டிகளை குணப்படுத்த சிகிச்சை உள்ளது.
வலியற்றதாக இருக்கும் இந்த தோல் கொழுப்புக்கட்டிகள் கழுத்து, தோள்பட்டை, வயிறு மற்றும் கால்கள் போன்ற பகுதிகளில் தோன்றுகின்றன. இவை பொதுவாக தீங்கு விளைவிக்காதவை என்றாலும், சிலருக்கு இது அசௌகரியத்தையும், அழகியல் கவலையையும் ஏற்படுத்தலாம். கொழுப்புக்கட்டிகளின் மூல காரணங்களையும், அதன் அறிகுறிகளையும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவர் தீபா விளக்குகிறார்
இந்த மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவம் உடலை முழுமையான அமைப்பாகக் கருதுவதாகும். இயற்கை மருத்துவம் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு, குறிப்பாக உணவுப் பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
காலையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்வதும், மதியம் மற்றும் இரவு உணவுகளை சரியான நேரத்தில் சமச்சீராக உட்கொள்வதும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, உடலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது. கொழுப்புக்கட்டி உருவாவதற்கு உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் தீபா.
மண் சிகிச்சை (Mud Therapy) ஒரு பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையாகும். இது கொழுப்புக்கட்டி உள்ள இடத்தில் தொடர்ந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மண்ணின் சிகிச்சை குணங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, அந்த இடத்தை குளிர்விக்கிறது. எலுமிச்சை சாறு ஒரு சிறந்த நச்சு நீக்கி (Detoxifier) ஆகும். இதை உட்கொள்வது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும். சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் போன்ற பிரச்னைகளுக்கும் இது நன்மை பயக்கும். மேலும், எலுமிச்சை தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் கொழுப்பு செரிமானம் அடைந்து, கரைந்து வெளியேற உதவும் என்றும் கூறுகிறார் மருத்துவர் தீபா.
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையின்படி, உலர்ந்த நாட்டு பாதாம், மஞ்சள் தூள் கலந்த பசையை, கொழுப்புக்கட்டி உள்ள இடத்தில் தடவுவது மற்றொரு வெளிப்புற சிகிச்சையாகும். இந்த இரு பொருட்களும் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் திசுக்களை குணப்படுத்தும் (Tissue-healing) பண்புகளைக் கொண்டுள்ளன. உடனடி நிவாரணம் மற்றும் கொழுப்புக்கட்டி மாற்றத்தை ஏற்படுத்த, குளிர்ந்த ஒத்தடம் (Cold Compress) பயன்படுத்தலாம். வெண்கடுகு மற்றும் உலர்ந்த இஞ்சி பொடியை தண்ணீர் கலந்து பசைபோல் செய்து போடுவதும் மற்றொரு பாரம்பரிய வைத்திய முறையாகும். மேலும், ரோஸ்மேரி, டீ ட்ரீ மற்றும் தைம் எண்ணெய்களை தேங்காய் அல்லது எள் எண்ணெயுடன் கலந்து மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, திசு ஆரோக்கியம் மேம்படும் என்கிறார் மருத்துவர் தீபா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.