scorecardresearch

முகப்பரு முதல் தோல் சுருக்கம் வரை : துளசியை இப்படி பயன்படுத்தினால் அசத்தலான ரிசல்ட் கிடைக்கும்

துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது.

basil

துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது.  

இது தொடர்பாக டர்மட்டாலஜி பயின்ற மருத்துவர் திருபாதி  கூறுகையில் “ துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மான்கனீஸ், காப்பர், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம்,  ஓமேக் 3 பேட்டி ஆசிட் இதில் இருக்கிறது.

இந்நிலையில் வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது.  இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், வயதாவதை தள்ளிப்போடும். இந்நிலையில் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. கூடுதலாக தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தை தரும். இந்நிலையில் இந்த தன்மையை குறைக்க துளசி உதவும்.

பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பேக்ட்ரீயா ஆகியவற்று எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளை, இது பரவாமல் தடுக்கும். நமது முகத்தில் உள்ள துளைகள் அடைபடும்போது முகப்பரு ஏற்படும் . இந்நிலையில் இதை தடுப்பதால், முகப்பரு ஏற்படாது.

இந்நிலையில் துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், இது முகப்பரு வராமல் தடுக்கும்.

வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும். இந்நிலையில் துளசியில் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சி, சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை சரியாக்க துளசியை பயன்படுத்தலாம்.

துளசி பொடி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் பயன்படுத்தினால், சருமம் மிரதுவாக மாறும்.

நீரின்றி வரண்டுபோன சர்மத்தை, மிரதுவாகவும், பொலிவாகவும் மாற்றும். துளசியில் இயற்கையான எண்ணெய் இருப்பதால், நமது சருமத்தின் தண்ணீர் பதத்தை இழக்காமல் பாதுகாக்கும்.

இந்நிலையில் சுற்றுப்புற சூழலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். துளசி இலைகளை நன்றாக கழுவி, தயிர் அல்லது யோகர்டில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திரகரிக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: This wonder ingredient can transform your skin