Three-ingredient homemade ice cream recipe : இந்த கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலேயே அனைத்தையும் சமைத்து சாப்பிடுவது என்பது புதிய பழக்கமாகிவிட்டது. சாதம், குழம்பு, ரசம், துவையல் என்று நம்முடைய அன்றாட உணவுகளை வீட்டில் செய்வது எளிதானது தான். ஆனால் இந்த ஐஸ்க்ரீம்? கேட்கவே கொஞ்சம் யோசனையாக தான் இருக்கிறது.இந்த ஐஸ்க்ரீம் செய்ய உங்களுக்கு மூன்றே மூன்று பொருட்கள் போதும் என்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபுட்டீ மோன்.
கண்டன்ஸ்ட் பாலை, க்ரீமுடன் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். நல்ல ஸ்மூத் டெக்ஸ்டர் கிடைக்கும் வரை அதன்னை பீட் செய்து பிறகு குளீருட்டப்பட்ட 6 வோவோ பிஸ்கட்களை அதில் உடைத்து போட வேண்டும். அந்த கலவையை அப்படியே ஒரு கண்டெய்னரில் மாற்றி பின் ஃப்ரீசரில் வைத்து 4 மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான ஐஸ்க்ரீம் ரெடி. இந்த வோவோ பிஸ்கட்களை பயன்படுத்தி ஐஸ்க்ரீம் செய்து முதலில் டிக்டாக்கில் வெளியிட்டிருக்கிறார் மோன். அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பலரும் இது போல் களத்தில் இறங்கி ஐஸ்க்ரீம் தயாரித்து அசத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil