/indian-express-tamil/media/media_files/2025/04/26/gdMt9UOxivKOG8ZZlmED.jpg)
பொதுவாக வீடுகளில், ஈ, கொசுக்கள், பல்லிகள், எறும்புகள் இருப்பது போன்று கரப்பான் பூச்சியும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் அசுத்தங்கள் அதிகமாக இருந்தால் இந்த மாதிரியான பூச்சி இனங்கள் குடிகொண்டிருக்கும். இதனால் சமைக்கும் உணவில் மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் பதிப்புக்கு உள்ளாக நேரிடும். குறிப்பாக கரப்பான் பூச்சி அதிகம் இருந்தால், நோய் தாக்கமும் அதிகம் இருக்கும் என்று சொல்வார்கள்.
கோடை காலத்தில் கரப்பான் பூச்சிகளின் தாக்கம் அதிகரிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்திய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் ஷர்மா, பருவநிலை மாறும்போது பூச்சிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்வதாகப் குறிப்பிட்டுள்ளார்.
கரப்பான் பூச்சிகள் சூடாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும் சாக்கடைக் குழாய்களில் வாழ்கின்றன. அதிக நீர் உபயோகம் உள்ள கோடை காலத்தில், அவை மற்ற சூடான மற்றும் ஈரப்பதமான இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் கரப்பான் பூச்சிகளை இத்தகைய காலத்தில் அதிகமாக பார்க்க முடியும். இந்த கரப்பான் பூச்சிகளுக்கான உணவு கிடைத்தல் மற்றும் அவற்றின் வளர்சிதை மாற்றங்கள் காரணத்தால், கோடை காலத்தில் அவை வேகமாக இயங்கும்.
கரப்பான் பூச்சிகள் இருண்ட, ஈரமான மற்றும் சூடாக இருக்கும் இடங்களைக் கண்டறிந்து, உணவை எளிதில் அணுகும். இதனை தடுக்க, சிலிண்டரின் அடிப்பகுதி, வாஷ் பேசின், ஃப்ரிட்ஜின் பின்பகுதி போன்ற இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கரப்பான் பூச்சிகள் தங்கள் எதிர்ப்பு ஆற்றலின் மூலம், மனிதகுலத்தை விட அதிகமாக உயிர்வாழும் திறன் கொண்டது. இந்த பூச்சியினம் அதிகம் உருவாவதை தடுக்கும் வகையில், வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
எனவே, கரப்பான் பூச்சிகள் வரும் பாதையை அறிந்து அவற்றை அடைக்க வேண்டும். இதனை விரட்ட நம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில பூச்சி மருந்துகளை பயன்படுத்தலாம் என்று ஷர்மா தெரிவித்துள்ளார். கரப்பான் பூச்சிகளை விரட்டும் முறை குறித்து சமையற்கலைஞர் அனன்யா பானர்ஜி சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அதன்படி, கிச்சனில் கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் பிரிஞ்சி இலைகளை வைக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதேபோல், தண்ணீரில் சில துளிகள் வேப்பெண்ணெய்யை கலந்து கிச்சனில் ஸ்ப்ரே செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.