நீங்க ஆரோக்கியமான உறவில்தான் இருக்கிறீர்களா? இந்த மூன்று அறிகுறிகள் இருக்கிறதா?

Three signs that someone is good for you Tamil news உங்கள் பலத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியும் மற்றும் பலவீனங்களை சமநிலைப்படுத்தி வலிமைப்படுத்த முடியும்

Three signs that someone is good for you Tamil news
Three signs that someone is good for you Tamil news

Three signs that someone is good for you Tamil news : வாழ்க்கையில், நாம் எல்லா விதமான மக்களையும் சந்திக்கிறோம். ஆனால், அவர்களில் வெகு சிலர் மட்டுமே நமக்கும் நம் வளர்ச்சிக்கும் உண்மையில் உதவுவார்கள். மறுபுறம், எதிர்மறை, நச்சுத்தன்மையை நிலைநிறுத்தி நம்மை வீழ்த்த முயல்பவர்களும் இருக்கிறார்கள். யோசிக்காமல் இதுபோன்ற நெகட்டிவ் மக்களிடமிருந்து விலகி இருப்பது எப்போதும் நல்லது.

இந்த தொற்றுநோய் காலகட்டத்தில், நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுடன் நேரம் செலவிடக் கற்றுக்கொண்டோம். அவர்களில் நிச்சயம் நம் குடும்பம், சில உண்மையான நண்பர்கள், சில சக ஊழியர்கள் அடங்குவார்கள். அவர்களில் நம் உண்மையான வளர்ச்சிக்கு யார் நமக்கு உதவ முடியும் என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த பேண்டமிக் அளித்துள்ளது.

அனைத்து உறவுகளும் முக்கியமானவை என்றாலும், அவற்றில் சரியானவை மட்டுமே நமக்கு அதிகாரம் அளிக்கும் திறன் கொண்டவை என்று பிரபல பேச்சாளர் தேவினா கவுர் கூறுகிறார்.

அந்த வரிசையில், ஆரோக்கியமான உறவில்தான் இருக்கிறோம் என்பதைக் கூறும் மூன்று அறிகுறிகளை அவர் பட்டியலிடுகிறார்

ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை

உங்கள் சுய அறிவின் பயணத்தின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட, கற்றுக்கொண்ட உங்கள் எல்லா பகுதிகளையும் பற்றி சிந்தித்து, உங்கள் விருப்பங்கள், வெறுப்புகள் மற்றும் உங்கள் உண்மையான சுயத்தை உள்ளடக்கிய அனைத்தும் என்ன என்பதைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள் என்று கவுர் கூறுகிறார்.

“உண்மையான மற்றும் நேர்மறையான உறவுகள் உங்கள் பாதிப்புகளுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அனுமதிக்கும். வாழ்க்கை உங்களை அழுத்தும்போது அந்த உறவு உங்களுக்கு ஆறுதலளிக்கும். மேலும், உலகத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும். இது ஒரு வலிமையான அணியாக நீங்கள் ஒன்றாக வளர உதவும். மற்றவர்களை விட நீங்கள் யார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்கள் உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு நீங்கள் அவர்களை நம்புவதால் உங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரியும். உங்களையும் சேர்த்து மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் பலத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியும் மற்றும் பலவீனங்களை சமநிலைப்படுத்தி வலிமைப்படுத்த முடியும்” என்று அவர் கூறுகிறார்.

நீங்கள் நீங்களாகவே இருக்க முடிகிறதா?

கவுரின் கூற்றுப்படி, சுய-அன்பிற்கான பயணம் காதல் தானே. உங்கள் பார்ட்னர் உங்களோடு திரைப்படத்திற்கு வந்தாலும் அல்லது உங்களுடன் ஷாப்பிங்கிற்கு வருமாறு வற்புறுத்தினாலும், உங்களுடன் நேரத்தை செலவிட உற்சாகமாக இருக்கிறார்களா என்பதை கவனியுங்கள். முடிந்தவரை அவ்வப்போது உங்கள் அருகில் இருப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். அதுமட்டுமின்றி நீங்கள் நீங்களாகவே எந்தவித தயக்கமும் இன்றி இருக்க முடிகிறதா என்பதையும் பாருங்கள். வெட்கம் அல்லது குற்ற உணர்வு இல்லாமல் உங்களை வெளிப்படுத்தும் உங்கள் திறனை அந்த உறவு வலுப்படுத்தும்.

“உங்கள் பார்ட்னர் வேலை மற்றும் சமூகக் கடமைகளால் மூழ்கியிருக்கும் போதும், உங்களுடன் நேரம் செலவழிக்க விரும்பும் உணர்வுகள் பொக்கிஷமானவை. நீங்கள் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்தும் தைரியம் உங்களுக்கு எவ்வளவு அதிகமாக அந்த நபரிடம் இருக்கிறதோ, அதேபோன்று பிறரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும்”.

உங்கள் எல்லைகளை மதிக்கும் ஒருவர்

உங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் ஒருவர் உங்கள் தனித்துவத்தை ஆதரிப்பார் மற்றும் மதிப்பார். அதாவது அவர்கள் ஒரு படி பின்வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள். நிச்சயம் அவர்கள் உங்கள் உணர்வுகளுக்கும் எல்லைகளுக்கும் மதிப்பு கொடுப்பார். உங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்த உங்களுக்கு அதிகாரம் அளிப்பார்கள். உங்களை ஒருபோதும் குற்றவாளியாக உணர வைக்க மாட்டார்கள்.

“உங்களுக்கு நல்லவர்களாக இருப்பவர்கள், உங்களின் அடுத்த நிலை நம்பகத்தன்மைக்கு உங்களை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் நீங்கள் விரும்பும் பண்புகளுடன் இணையும் குணங்கள் அவர்களிடம் இருக்கும். ஆனால், அது சுய அறிவிலிருந்து தொடங்குகிறது. இது அதிக சுய அன்பிற்கு வழிவகுக்கிறது” என்று கவுர் முடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three signs that someone is good for you tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com