Three simple Kitchen ingredients for longer and stronger hair Tamil News : நாம் அனைவரும் நீண்ட மற்றும் பளபளப்பான தலைமுடியைத்தான் விரும்புவோம். இருப்பினும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் வானிலை, அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகளால், முடி உதிர்தல் பெரும் பிரச்சனையாக உருவாகி வருகிறது. அதன் தீர்வுக்காக, நாம் விலையுயர்ந்த ஷாம்பூக்கள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துவோம். ஆனால், அவை எப்போதும் வேலை செய்யாது.
உங்கள் முடியின் தரம் மற்றும் வளர்ச்சி, நீங்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்தது. இதனால், உங்கள் முடி பிரச்சனைகளுக்குத் தீர்வு உங்கள் சமையலறையில்கூட இருக்கலாம். உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் வளர உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடிய மூன்று எளிய பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். ஆனால், அவற்றை ஒருமுறை பயன்படுத்துவதோடு நிறுத்திவிடக்கூடாது. வாரத்திற்கு 4-5 முறையாவது பயன்படுத்தவேண்டும்.
ஆம்லா
இது இயற்கையாகவே கிடைக்கும் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பொருள். இது உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பதற்கு ஊக்குவிக்கும் ஓர் கொலாஜன். உங்கள் தலைமுடி ஒவ்வொரு வருடமும் ஆறு அங்குலங்கள் வளர்கிறது. இது உங்கள் வயது, மரபியல் மற்றும் உணவைப் பொறுத்தது.
ஆளி விதைகள்
இரண்டு டேபிள்ஸ்பூன் ஆளி விதைகள், சுமார் 6,400 மில்லிகிராம் ஒமேகாவை உங்களுக்கு வழங்குகிறது. ஒமேகா 3 முடி உதிர்வதைக் குறைத்து நீளமாக வளரச் செய்யும்.
கறிவேப்பிலை
தினமும் உங்களுக்கு பிடித்தமான காய்கறி ஜூஸில் 10-15 கறிவேப்பிலை சேர்த்துக் குடிக்கலாம். அவற்றில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் E உள்ளது. இதனால் உங்கள் தலைமுடி வலுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். நரைப்பதை அது மெதுவாக்கும்.
எனவே, கறிவேப்பிலையை தினமும் உங்கள் உணவில் சேர்த்து, உங்கள் முடியை நீங்கள் விரும்பும் அளவுக்கு வளரச் செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil