சர்க்கரை நோய் ஒரு முறை இருக்கிறது என்று உறுதியான பிறகு, நாம் அடிக்கடி ரத்த சுகர் அளவை டெஸ்ட் செய்வதில்லை. இந்நிலையில் உங்களின் ரத்த சர்க்கரை அதிகரித்தால், இந்த மூன்று அறிகுறிகளை பாதத்தில் ஏற்படலாம்.
காலில் நரம்பு பாதிப்பு ஏற்படலாம். இது உங்கள் கால் விரல்களை மற்றும் பாதத்தை மரத்து போகச் செய்யும். அதுபோல குத்துவது போல உணர்வை ஏற்படுத்தும். இதற்கு நாம் மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் காலில் புண்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும்.
இதுபோல உங்கள் பாதங்கள் அல்லது விரல்களில் ஊசியால் குத்துவது போல இருக்கும். இந்நிலையில் அதிக நாட்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதத்தில், இதுபோன்று காலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும்.
உங்கள் கால் அல்லது பாதத்தில் அடி அல்லது காயம் ஏற்படும்போது அதிக நாட்கள் குணமடைய எடுத்துகொண்டாலும், சுகர் அதிகரித்துள்ளது என்று அர்த்தம். இதை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டால், புண்கள் அதிகமாகி புழுக்கள் கூட ஏற்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“