இதில் மூன்று வகையான கேக் ரெசிபியை எப்படி செய்வது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
கேரட் கேக்
தேவையான பொருட்கள்
3 கேரட்
1 கப் மைதா மாவு
ஒரு சிட்டிகை உப்பு
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
½ கப் உருக்கிய பட்டர்
½ கப் சர்கக்ரை
2 முட்டை
பால் சிறிய அளவில்
½ கப் கண்டெஸ்ட் பால்
3 துளி வெண்ணில எசன்ஸ்
¼ கப் சர்கக்ரை
½ கப் தேன்
செய்முறை: 3 கேரட்டை துருவி, அதன் சாறை எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். இதைத்தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் பட்டர், சர்க்கரை, முட்டை, கேரட் சாறை சேர்த்து அடித்துக்கொள்ளவும். இதில் பாலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். இதை மாவு கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும். தொடர்ந்து இதை நன்றாக பேக் செய்யவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் க்ரீம், கண்டெஸ்ட் பால், வெண்ணில எசன்ஸ், சர்கக்ரை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். இதை கேக் மீது தட வேண்டும்.
ஸ்டாபெரி கேக்
தேவையான பொருட்கள்
1 கப் ஸ்டாபெரி
1 கப் மைதா
½ கப் பட்டர்
½ கப் காஸ்டர் சர்க்கரை
2 முட்டை
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
1 ½ கப் பேக்கிங் பவுடர்
1 கப் க்ரீம்
¼ கப் சர்க்கரை
வெண்ணிலா எசன்ஸ் 4 சொட்டு
செய்முறை : ஸ்டாபெரியை வைத்து அதன் சாறை எடுத்துகொள்ளவும். 1 கப் மைதாவில், இதை சேர்க்கவும், பட்டர், சுகர் சேர்த்து கிளரவும். முட்டை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடித்துக்கொள்ளவும். தொடர்ந்து பாலை சேர்த்து கொள்ளவும். நன்றாக அடித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இதை மாற்றி, அதற்கு மேலாக நறுக்கிய ஸ்டாபெரிகளை சேத்து கொள்ளவும். இதை பேக் செய்யவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் க்ரீம், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடித்துகொள்ளவும். இதை கேக் மீது தடவி, நாம் சாப்பிடலாம்.
வெண்ணிலா கேக்
தேவையான பொருட்கள்
2 கப் மைதா
1 கப் பிரவுன் சுகர்
1 கப் பட்டர்
2 சிட்டிகை உப்பு
1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
1 ½ கப் பேக்கிங் பவுடர்
பால் சிறிய அளவு
செய்முறை: பட்டர், மைதா, சர்க்கரை நன்றாக கலந்துகொள்ளவும். தொடர்ந்து இதில் பால் சேர்த்து அடித்துகொள்ளவும். தொடர்ந்து வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், ஆகியவற்றை சேர்த்து அடித்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் இதை மாற்றி பேக் செய்து கொள்ளவும்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“