கதம்ப துவையலை ஒரு முறை இப்படி செய்யுங்க, செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்:-
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சமையல் கடலை பருப்பு - 1tbsp
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 20
பெருங்காயம் கட்டி - 4
சின்ன வெங்காயம் - 80 கிராம்
பூண்டு பல்லு - 4
இஞ்சி துண்டுகள் - 5 கிராம்
தக்காளி - 100 கிராம்
புளி - 3 கிராம்
தேங்காய் துருவல் - 50 கிராம்
வரமிளகாய் - 6
மல்லி தழை - 25 கிராம்
புதினா தழை - 25 கிராம்
கல் உப்பு - 4 கிராம்
கதம்ப துவையல் செய்முறை:-முதலில் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடுகு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் 4 முதல் 5 நிமிடங்கள் இடைவெளியில் சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்கு வதக்கிய பின் கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி தனியாக ஆற வைக்கவும்.பிறகு, அவற்றில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் அம்மியிலோ அல்லது மிக்சியிலோ இட்டு அரைக்கவும். இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த கதம்ப துவையல் ரெடியாக இருக்கும் அவற்றை உங்களுக்கு விருப்பமான உணவுகளுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.