ரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும் நார்சத்து… இந்த பாரம்பரிய அரிசியில் அதிகமாக இருக்கு! டாக்டர் மைதிலி
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான தூயமல்லி அரிசியில், நார்ச் சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின்கள் உள்ளன. தினமும் அன்றாட உணவில் சேர்க்கும்போது எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான தூயமல்லி அரிசியில், நார்ச் சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின்கள் உள்ளன. தினமும் அன்றாட உணவில் சேர்க்கும்போது எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான தூயமல்லி அரிசியில், நார்ச் சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, பி மற்றும் வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, புரதச் சத்து, மாவுச் சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. இந்த தூயமல்லி அரிசியைத் தினமும் அன்றாட உணவில் சேர்க்கும் போது எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
Advertisment
நார்ச்சத்து அதிகம் இருக்கக் கூடிய தூயமல்லி அரிசியை அன்றாடம் வெள்ளை அரிசிக்கு பதிலாக உணவில் சேர்த்து வரும்போது, ரத்தத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதனால், நீரிழிவு நோய் பாடதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவுதான் என்கிறார் மருத்துவர் மைதிலி.
இதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். தூய மல்லி அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உணவாகச் சாப்பிடலாம். இன்சுலின் உற்பத்தியை சீராக வைக்கக்கூடிய தன்மையும் தூயமல்லி அரியில் உள்ளது. தூய மல்லி அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது, நரம்பு மண்டலம் பலம் பெறும். வயதான காலத்தில் வெளித்தோற்றம் மட்டுமல்லாமல், உள் உறுப்புகளும் முதிர்ச்சியடையும்.இவற்றைத் தடுக்க தூயமல்லி அரிசியில் ஆன உணவுகள் சாப்பிட்டு வருவது நல்லது என்கிறார் மருத்துவர் மைதிலி.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.