அதீத சோர்வு, தூக்கம்... ஆபத்தான அறிகுறி இது; இந்த டெஸ்ட் எடுங்க: டாக்டர் ஷர்மிகா
தைராயிட் பிரச்சனை இருப்பவர்களுக்கான அறிகுறிகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
தைராயிட் பிரச்சனை இருப்பவர்களுக்கான அறிகுறிகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ஒரு நபருக்கு தைராயிட் பிரச்சனை இருக்கிறது என்றால் சில அறிகுறிகள் மூலமாக கண்டறியலாம். அதன்படி, தைராயிட் பாதிப்பிற்கான அறிகுறிகள் குறித்து டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் சேனலில் மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில் அதீத தூக்கம் அல்லது அதீத சோர்வு இருந்தால் தைராயிட் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு அன்றாட பணிகளை மேற்கொள்ளக் கூட முடியாத அளவிற்கு சோர்வு காணப்படும்.
இதேபோல், சிலருக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்படும். குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை போன்று முடி உதிர்வு இருக்கிறது என்று சிலர் கூறுவதை கேட்டிருப்போம். எனவே, சமீப நாட்களில் அதிகப்படியான முடி உதிர்வை சந்திக்க நேர்ந்தால் தைராய்ட் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
மேலும், சருமங்களில் சில மாற்றங்களும் தென்படும். முகத்தின் அமைப்பு மாற்றமடைந்ததை போன்று சிலருக்கு தோன்றும். குறிப்பாக, பெண்களுக்கு ஆண் தோற்றம் வந்ததை போன்று கூறுவார்கள். எனவே, தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் தைராய்ட் பிரச்சனையாக இருக்கலாம்.
Advertisment
Advertisements
இது தவிர காரணமின்றி உடல் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ மருத்துவரை அணுகி தைராய்ட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிலருக்கு தைராய்ட் பிரச்சனை இருந்தால் மலச்சிக்கல் இருக்கும்.
எனவே, இது போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.