டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கும் டிக்கெட் செக்கரை நாம் பார்த்திருப்போம். ஆனால், அந்த டிக்கெட் செக்கரே போலியாய் இருந்தால் ? இந்திய ரயில்வேத் துறையில் இந்த மாறி பலமடங்கு போலி டிக்கெட் செக்கர்கள் நடமாடி வருவது இந்திய ரயில்வேத் துறையை அதிர்ச்சியளித்திருக்கிறது.
கடந்த வாரம், புனே-இந்தூர் எக்ஸ்பிரஸ் டி.டி.இ. உடையணிந்த ஒருவர் டிக்கெட்டுகளை பரிசோதித்து, சில பயணிகளை பணம் செலுத்துமாறு மிகவும் கட்டாயப்படுத்தி உள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அந்த ரயிலில் பயணம் செய்த சிலர் உண்மையான டி.டி.இ சுனில் மலுசரேவிடம் புகார் கொடுத்திருக்கன்றனர். பிறகு, சுனில் மலுசரே அவரைக் கையும் களவுமாக பிடித்து கல்யாண் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்பைடைத்தர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த வாரத்தில் கூட புனே-லோனாவாலா ரயில் தடங்களிலும் கூட இரண்டு போலி போலி டிக்கெட் செக்கர்கள் பிடிபட்டனர். இதை முற்றிலும் ஒழிக்க ரயில்வே துறையிடம் போதுமான பதில் இல்லை என்றும், இதை தடுக்கும் வல்லமை பயனாளர்களின் விழிப்புணர்வில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்
மேலும், அவர் கூறுகையில் - தங்களிடம் வருபவர் உண்மையான டிக்கெட் செக்கர் என்பதை முதலில் பயனர்கள் உறுதி செய்ய வேண்டும். அவரிடம் ஐ.டி அட்டை உள்ளதா, உங்களிடம் வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்தாரா? டி.டி.இ பேட்ஜ் உள்ளதா ? என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்