scorecardresearch

2256ம் ஆண்டில் இருந்து மனிதன் பூமிக்கு வந்தது உண்மையா?

அதன் பின் அவர்கள் இருவரும் மாயமாயினர். விசாரணையின் போது தான் வந்த காலம் கடந்து செல்லும் வாகனம் ஒன்றை பற்றியும் அவர் கூறியுள்ளார்

2256ல் இருந்து பூமிக்கு வந்த மனிதர்

லியோ

அன்றாடம் பொழுதை அழகாய் கழித்து மகிழும் மக்களாகிய நாம், இந்த உலகம் அடுத்த நொடி நமக்கென ஒளித்து வைத்திருக்கும் பல ஆச்சர்யங்களை அறியாமலே காலத்தை நகர்த்துகிறோம், இல்லை இல்லை அந்த காலத்தோடு சேர்ந்து நகர்கிறோம். நாளை நடப்பது என்னவென்று எவராலும் கூறமுடியுமா? முடியாது என்பதே நம்மில் பலரின் பதில். காலம் தன்னை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்ததே இல்லை. ஆனால் Da Vinci, Albert Einstein முதல் நம் ராமானுஜம் வரை அந்த பதிலை நம்மால் அறியமுடியும் என்று நம்பினார். ஆம் அதுதான் காலம் கடந்த மனிதனின் பயணம். பேருந்து, கப்பல், விமானம், ஏவுகணை என்று பயண ஊர்திகளின் உச்சத்தை நாம் தொட்டுவிட்டாலும் இன்னும் காலம் கடந்து செல்லும் ஊர்திகளை நாம் கண்டறியவில்லை.

உண்மையில் மனிதனால் காலம் கடந்து சொல்லமுடியுமா? வாருங்கள் அதை பற்றிய ஒரு அறிவியல் அமானுஷ்ய பதிவை காண்போம்.

நிகழ்காலத்தில் இருந்து கடந்துவிட்ட காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நம்மால் சென்றுவர இயலுமானால் அதுவே TIME TRAVEL காலம் கடந்த பயணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவரை பல சமயங்களில், பல காலகட்டங்களில் இதற்கான சான்றுகள் இருந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 2010ம் ஆண்டு 1928ம் ஆண்டு படமாக்கப்பட்ட சார்லி சாப்ளினின் குறும்படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளானது, ஏனென்றால் அந்த காணொளியில் ஒரு பெண் தன் காதில் ஒரு செல்போன் வைத்து பேசிக்கொண்டு செல்வது போல படமாக்கப்பட்டிருந்தது. அதை கண்ட அனைவரும் அதிர்ந்து போயினர் காரணம் 1973ம் ஆண்டு Motorolo நிறுவனம் தான் முதல்முதலில் செல் போன்களை அறிமுகம் செய்தது. பலர் அந்த காணொளியில் அந்த பெண் வைத்திருப்பது ஒரு Hearing Aid என்று கூறியபோதும் அது இன்னும் மர்மமாகவே உள்ளது.

2003ம் ஆண்டு அமெரிக்கா மாகாணத்தில் Weekly World News என்ற பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளிவந்தது, அதில் Andrew Carlssin என்ற ஒரு நபர் FBI என்று அழைக்கப்படும் அமெரிக்க உளவு நிறுவனத்தால் பங்குசந்தையில் மிக பெரிய அளவில் ஊழல் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். வெறும் 800 டாலர் முதலீட்டில் மிக குறுகிய காலத்தில் சுமார் 300 மில்லியன் டாலர் அவர் ஈட்டியுள்ளார். இதை விசாரித்தபோது அவர் கூறியது திடுக்கிட வைத்தது. ஆம்! தான் 2256ம் ஆண்டில் இருந்து வந்திருப்பதாகவும், ஆதலால் எந்த பங்குச்சந்தை நிலவரத்தையும் தெளிவாக கூறமுடியும் என்றும் கூறினார். 2002ம் ஆண்டிற்கு முன்புவரை அவர் எங்கிருந்தார், என்ன செய்துவந்தார் என்பதற்கு ஒரு சிறு குறிப்பும் கிடைக்கவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து 1 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தி ஒருவர் அவருக்கு ஜாமீன் வாங்கி விடுதலை செய்துள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் மாயமாயினர். விசாரணையின் போது தான் வந்த காலம் கடந்து செல்லும் வாகனம் ஒன்றை பற்றியும் அவர் கூறியுள்ளார்.

2256ம் ஆண்டில் இருந்து வந்ததாக வாக்குமூலம் அளித்த மர்ம மனிதர்
2256ம் ஆண்டில் இருந்து வந்ததாக வாக்குமூலம் அளித்த மர்ம மனிதர்

இப்படி காலம் கடந்து சென்று வந்த மனிதர்களை பற்றிய பட்டியல் நீள்கிறது. உண்மையில் மனிதனால் காலங்களை கடந்து சொல்லமுடியுமா? இல்லை அவ்வப்போது எதிர்கால மனிதன் நம்மையும் கடந்த கால மனிதனையும் சந்தித்து செல்கின்றானா? ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தனது Special Relativity என்ற தலைப்பில் இதை பற்றி கூறியுள்ளார். அதில் ஒரு மனிதன் ஒளியின் வேகத்தில் 99.5 சதவிகிதத்தை பயன்படுத்தி பறக்கக்கூடிய ஒரு விண்கலத்தில் (தற்போது உள்ள வேகத்தை விட அதி வேகமாக) தனது 25ம் வயதில் பயணத்தை மேற்கொண்டு 5 ஆண்டுகளை விண்வெளியில் கழித்துவிட்டு திரும்புவானாயின் அவன் தன் 30ம் வயதில் பூமியை வந்தடைவான், ஆனால் அவன் சம வயதுடைய மனிதர்களோ தங்களது 75ம் வயதில் இருப்பார்கள் என்பதே அந்த ஆய்வின் முடிவு. ஒளியின் முழுமையான வேகத்தில் பயணம் செய்யும் போதும் 50 மடங்கு அதிவேகத்தில் பயணம் செய்யமுடியும் என்பது அவரின் ஆய்வு.

அப்படி என்றால் இந்த முறையில் தான் எதிர்கால மனிதன் பயணிக்கிறானா? இல்லை ஒளியை விட வேகமா பயணிக்கும் ஒன்றை கண்டுகொண்டனா என்பது எல்லாம் மர்மமே. ஒளியின் வேகத்தை இன்னும் நாம் முழுமையை பயன்படுத்த கற்றிருக்காத காலத்தில் ஒளியின் முழுமையான வேகம், அதையும் தாண்டி அதிவேகம் அதில் பயணிக்கும் எதிர்கால மனிதன் என்பது எல்லாம் நமக்கு அமானுஷ்ய ஆச்சர்யமே. ஆனால் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நம்மை சுட்டிறயுள்ள அறிவியலும் வளர்ந்து கொண்டுவரும் இந்த நவயுக காலத்தில் எதுவும் சாத்தியமே.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Time travel from 2256th year