பாலூட்டும் தாய்மார்கள் குளிர்காலத்தில் முலைக்காம்புகள் மரத்துப் போனால் என்ன செய்யலாம்? மகப்பேறு மருத்துவர் பதில்
குளிர் மாதங்களில் முலைக்காம்புகள் மரத்துப்போவது மற்றும் பால் குழாய்கள் அடைப்பது போன்ற சில பிரச்னைகளால் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் சிரமப்படுகிறார்கள்.
குளிர் மாதங்களில் முலைக்காம்புகள் மரத்துப்போவது மற்றும் பால் குழாய்கள் அடைப்பது போன்ற சில பிரச்னைகளால் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் சிரமப்படுகிறார்கள்.
குளிர்காலத்தில், மாறிவரும் வானிலை பல்வேறு பருவகால நோய்களுக்கு நம்மை ஆளாக்கும் என்பதால், நமது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த பருவம் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சவாலாக இருக்கும்.
Advertisment
குளிர் மாதங்களில் முலைக்காம்புகள் மரத்துப்போவது மற்றும் பால் குழாய்கள் அடைப்பது போன்ற சில பிரச்னைகளால் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் சிரமப்படுகிறார்கள்.
ஆம், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குளிர்காலம் சவாலாக இருக்கலாம், ஏனெனில் குளிர்ச்சியான வெப்பநிலை சில சமயங்களில் உடலின் பால் உற்பத்தியை குறைக்கலாம். இதனால் பால் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் அறைகளை சூடாக வைத்திருப்பது மற்றும் சூடான ஆடைகளை அணிவதன் மூலம் இந்த சிக்கல்களைத் தடுக்கலாம், என்று மகப்பேறு மருத்துவர் ராதிகா படனஹட்டி கூறினார்.
பால் குழாய்கள் அடைப்பு
Advertisment
Advertisements
குளிர்காலத்தில், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மார்பகங்களில் பால் குழாய்களில் அடைப்பை அடிக்கடி அனுபவிக்கலாம். குழந்தை, தாய்ப்பாலை முமுமையாக குடிக்கவில்லை என்றால் அல்லது பால் குழாய்களைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டால் பால் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். மேலும், பாலூட்டுவதை தவிர்த்தல் அல்லது ஒவ்வொரு முறை பாலூட்டுவதற்கு இடையே நீண்ட இடைவெளி இருந்தாலும் இது ஏற்படலாம், என்று டாக்டர் ராதிகா கூறினார்.
கடுமையான வலி, வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், சுமார் 20 நிமிடங்கள் ஹீட்டிங் பேட் அல்லது சூடான துணியைப் பயன்படுத்த டாக்டர் ராதிகா பரிந்துரைத்தார். குறிப்பாக பாலூட்டும் முன் அல்லது பம்ப் செய்வதற்கு முன், சூடான குளியல் எடுத்து, மார்பக திசுக்களை மசாஜ் செய்யலாம்.
பிடிவாதமான அடைப்புகளை அகற்றுவதற்கு நீங்கள் lactation massager பயன்படுத்தலாம். வெவ்வேறு பாலூட்டும் நிலைகளை முயற்சிக்கவும், ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம், என்று அவர் எச்சரித்தார்.
நீரிழப்பு தாய்ப்பாலின் உற்பத்தியை வியத்தகு முறையில் குறைக்கும்
முலைக்காம்பு உணர்வின்மை
முலைக்காம்பில் உணர்வின்மை, அசௌகரியம் அல்லது குளிரும் போது வலி ஏற்பட்டால், வார்மிங் பேக்குகளை (warming packs) பயன்படுத்தவும் அல்லது பாலூட்ட தொடங்கும் முன் warm compression செய்யவும்.
நீரேற்றம் முக்கியம்
தாய்ப்பால் கொடுப்பவர்கள் உட்பட அனைத்து தாய்மார்களும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இது நீரிழப்பு மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. ஹெர்பல் டீ, வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகுவது போன்றவை நன்மை பயக்கும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
நீரிழப்பு பால் உற்பத்தியை எவ்வாறு பாதிக்கும் என்பதை தெளிவுபடுத்தும் டாக்டர் ராதிகா, நீரிழப்பு தாய்ப்பாலின் உற்பத்தியை வியத்தகு முறையில் குறைக்கும். உங்கள் உடலில் தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் இருந்தால், அது உங்கள் பால் விநியோகத்தை உருவாக்க வேண்டும். தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, நீங்கள் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்வதாகும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு குறிப்புகள்
பச்சை இலை காய்கறிகள் (கீரை, ப்ரோக்கோலி) மற்றும் பருவகால பழங்களை சாப்பிடுங்கள். அவற்றில் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. மேலும், வைட்டமின் சி நிறைந்த, வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் கொண்டு நாளைத் தொடங்குமாறு டாக்டர் ராதிகா அறிவுறுத்தினார்.
பூண்டு மற்றும் இஞ்சியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள், பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
தவிர, தக்காளி, பச்சை இலைக் காய்கறிகள், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ், சியா விதைகள், பால், கொட்டைகள் மற்றும் பாதாமி, முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பழங்களை உட்கொள்ளுங்கள்.
இருப்பினும், காரமான, ஜங்க், எண்ணெய், வாயு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பச்சை உணவுகள் மற்றும் கடல் உணவுகளைத் தவிர்க்கவும், என்று டாக்டர் ராதிகா பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“