முதலில் நாம் ஏற்ற இருக்கும் விளக்குகளை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதேபோல் பஞ்சு திரியை எடுத்துக் கொண்டு அவற்றை, சிறிது எண்ணெய்யில் நனைத்துக் கொள்ள வேண்டும். இதை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், தண்ணீரில் ஊறிய விளக்குகளை வெயிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு வெயிலில் நன்றாக காய்ந்த விளக்குகளை, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். சுமார் 1 மணி நேரம் விளக்குகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இவ்வாறு ஃப்ரிட்ஜில் வைத்த விளக்குகளை ஏற்றும் போது அதில் இருந்து எண்ணெய் கசிவதற்கு வாய்ப்பு குறைவு.
இதன் பின்னர், நம் வீட்டில் இருக்கும் நக பாலிஷ் கொண்டு விளக்கின் அடிப்பகுதியில் தேய்க்க வேண்டும். இப்படி செய்வதாலும் விளக்கில் இருந்து எண்ணெய் கசிவு இருக்காது. இதை 10 நிமிடங்கள் ஃபேன் காற்றில் காய வைக்க வேண்டும்.
இப்போது, ஊற வைத்த பஞ்சு திரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு விளக்கில் இரண்டு பஞ்சு திரிகளை போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் விளக்கு சீக்கிரம் அணையாமல் இருக்கும். இதையடுத்து, கற்பூரத்தை பொடியாக்கி அதனை திரியில் தடவி கொள்ள வேண்டும்.
இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்வதன் மூலம் விளக்கில் இருந்து எண்ணெய் கசியாமலும் இருக்கும். அதே நேரத்தில், விளக்கும் நீண்ட நேரம் எரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“