கல்லில் ஒட்டாமல் முறுவலாக தோசை சுட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் நினைத்த மாதிரி தோசை தான் வராது. ஆனால் இந்த ஒரு சில டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்கள். போதும் முறுகலாக கடையில் வரும் பேப்பர் ரோஸ்ட் மாதிரி தோசை சுடலாம்.
டிப்ஸ் 1: நீண்ட நேரம் அடுப்பில் வெறும் கல்லை சூட்டில் வைக்க கூடாது.
டிப்ஸ் 2: சப்பாத்தி மற்றும் தோசையை ஒரே கல்லில் சுடக்கூடாது.
டிப்ஸ் 3: எப்போதும் தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து தான் சுட வேண்டும்.
ஒருவேளை கல் சூடாகி தோசை சுட வரவில்லை என்றால் அதை சீசன் செய்வதற்கும் டிப்ஸ் உள்ளது.
How to make non sticky dosa tawa in tamil|தோசை கல்லில் ஒட்டாமல் வர டிப்ஸ்|tips for non sticky dosa
டிப்ஸ் 4: தோசைக்கல்லை சீசன் செய்வதற்கு ஒரு காட்டன் துணியில் புளி சுற்றி அதை எண்ணெயில் தேய்த்து தோசைக்கல்லில் தடவி விடவும். அப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். இப்படியாக ஒரு 5 நிமிடம் தேய்த்தால் போதும். கல் பழைய நிலைமைக்கு வரும். அப்போது அதில் தோசை சுட்டால் முறுகலாக வரும்.