நீங்கள் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உங்கள் கண்களில் சோர்வு ஊடுருவுவதை உணர முடியுமா? ஆம் எனில், நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இது.
சோர்வு, நீண்ட நேரம் திரைகளை பார்ப்பது மற்றும் தூக்கமின்மையால் சோர்வு மற்றும் கண்கள் வீங்குவது போன்றவை ஏற்படலாம். இது சோம்பல் மற்றும் ஒட்டுமொத்த அதிருப்தி உணர்வை ஏற்படுத்தலாம்.
எனவே, சோர்வு மற்றும் வீங்கிய கண்களை எவ்வாறு சரி செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்காக எங்களிடம் சில தீர்வுகள் உள்ளன:
போதுமான அளவு உறக்கம்!
ஹெல்த்லைன்(Healthline) கூற்றுப்படி, ”ஒரு நல்ல இரவு தூக்கத்தை தவறாமல் கடைபிடிப்பது கண்களின் வீக்கத்தைக் குறைக்க உதவும். பெரியவர்களுக்கு தினசரி 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை.
தொற்றுநோய்களின் ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முன்னால் நீண்ட நேரம் இருக்க வேண்டும். உங்கள் கண்களில் அதிக அழுத்தத்தைத் தவிர்க்க, தினசரி நல்ல தூக்கம் அவசியம்.
காஃபினை குறைக்கவும்
காஃபின், விரைவான புத்துணர்ச்சிக்காக அதிகப்படியான மக்களால் உட்கொள்ளப்படுகிறது. ஆனால், நீங்கள் சோர்வு மற்றும் வீங்கிய கண்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அதை விலக்குவது நல்லது. காபி தூக்கத்தை தடுக்கிறது, சில சந்தர்ப்பங்களில், நீரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இது கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை மேலும் தீவிரமாக்கும். எனவே அதை தவிர்ப்பது மிக நல்லது. மேயோ கல்லூரியின் படி, "குறைந்தபட்சம் தூங்குவதற்கு 6 மணிநேரத்துக்கு முன் காஃபின் குடிப்பதை நிறுத்த வேண்டும்."
திரை நேரத்தை குறைக்கவும்
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து உங்கள் திரை நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சொல்வது எளிது. மடிக்கணினிகள், ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள் என பல்வேறு திரைகளைப் பார்க்கும்போது, இந்தச் சாதனங்களிலிருந்து நீல ஒளிக் கதிர்களை நாம் வெளிப்படுத்துகிறோம். குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தும் போது இது கவலைக்குரியது அல்ல, ஆனால் இடைவேளையின்றி பயன்படுத்தும்போது கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.
நீரேற்றட்டத்துடன் இருங்கள்!
ஹெல்த்லைன் படி, நீரிழப்பால் கூட முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். போதுமான தூக்கம் மற்றும் சரியான ஓய்வுடன், தொடர்ந்து தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
இந்த குறிப்புகள் உங்கள் கண்களை கவனித்துக்கொள்ள உதவும் என்று நம்புகிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil