பருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க... இல்லேன்னா பாடி தாங்காது!!

நாவற்பழம், லிச்சி, ப்ளம்ஸ், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி முலாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது

நாவற்பழம், லிச்சி, ப்ளம்ஸ், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி முலாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tips for weight loss and food taking - பருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்கயா... இல்லேன்னா பாடி தாங்காது!!

tips for weight loss and food taking - பருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்கயா... இல்லேன்னா பாடி தாங்காது!!

காலத்திற்கு ஏற்றால் போல் உணவு பழக்கத்தையும் மாற்றுங்கள்!

Advertisment

உணவுகளை பொருத்தவரை அந்தந்த பருவத்திற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். அப்படியாக சாப்பிடும்போதுதான் உடல் எடை குறைவதோடு ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

இப்போது உங்களுக்காக...

ஸ்நாக்ஸ்:

Advertisment
Advertisements

நெருப்பில் சுட்டு மக்கா சோளத்தை சாப்பிடலாம். அதில் லேசாக வெண்ணெய் தடவி நெருப்பில் வேகவைத்து சாப்பிடலாம்.

நீர்ச்சத்து:

கோடைக்காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படும். எனவே அடிக்கடி தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர், பழச்சாறுகள், ஹெர்பல் டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.

பழங்கள்:

நாவற்பழம், லிச்சி, ப்ளம்ஸ், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி முலாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. மேலும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மசாலா டீ:

மிளகு, இஞ்சி, பட்டை, கிராம்பு ஆகிய மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மசாலா டீயில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இதனை அடிக்கடி குடிக்கலாம். பால் மற்றும் சர்க்கரை சேர்க்காதவர்கள் என்றால் இந்த மசாலா டீயை தாராளமாக குடிக்கலாம்.

சூப்:

சூப்பில் கலோரிகள் குறைவு என்பதால் இதனை அடிக்கடி குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும், உடல் எடை குறைக்கவும் சூப் குடிக்கலாம்.

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: