வாழ்வியல் முறையை சீராக வைத்து கொண்டாலே போதும் நீரிழிவு நோய் நம்மை நெருங்காது. உடலை நோயின்றி பாதுகாப்பது மிகவும் சவாலான விஷயம் தான். இருந்தும் ஆரோக்கியம்தானே பலன் அளிக்கும். உடலில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதே நீரிழிவு நோய். நீரிழிவு நோய் ஏற்பட்டுவிட்டால் உடலில் இன்சுலின் சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடும்.
மேலும் உடற்பயிற்சியின்மை, தவறான உணவு பழக்கம், தூக்கமின்மை போன்றன நீரிழிவு நோய் ஏற்பட காரணங்கள்.
முதலில் நீரிழிவு நோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்,
தொடர்ச்சியான சோர்வு, உடல் பருமன், சருமத்தில் கருமை படர்தல், கொப்புளங்கள், கவனக்குறைவு, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை அதன் அறிகுறிகள்.
ஆனால் நீரிழிவு நோயை முன்கூட்டியே தடுக்க சில உணவுப் பழக்கங்களை பின்பற்றினால் இந் நோயில் இருந்து ஓரளவு தப்பிவிடலாம்.
இனி எவற்றை சாப்பிடலாம் எவற்றை தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
உணவுப் பழக்கம்:
க்ளைசமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்யும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அரிசி, ஒயிட் ப்ரெட், மைதா, உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்த்துவிட்டு சிவப்பு அரிசி, கோதுமை ப்ரெட் என முழுதானிய உணவுகளை சாப்பிடலாம்.
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் இருக்குமானால், அவை இரத்தத்தில் சர்க்கரையாக மாறிவிடும். அதனால் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடிய குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே பழங்களை கொண்டு பழச்சாறு தயாரித்து வடிக்கட்டாமல் குடிக்கலாம்.
பட்டாணி, சோளம் மற்றும் உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால் இவற்றை தவிர்த்திடுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், கீரைகளை சாப்பிடலாம். இவை செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கலை தடுக்கும்.
சாட்சுரேட்டட் கொழுப்புகளை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து பின் நீரிழிவு நோயுடன் இருதய நோயை உண்டாக்கும் என்பதால் உடலுக்கு தேவையான மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளையே சாப்பிடலாம்.
சிவப்பு அரிசி, பார்லி, தினை, தானியங்கள், காய்கறிகள், தக்காளி, கீரைகள், ப்ரோக்கோலி, முழு கோதுமை, முட்டை, கோழி, சோயா பீன்ஸ், விதைகள், கொட்டைகல், யோகர்ட், கேரட், காட்டேஜ் சீஸ், டோஃபு, ஓட்ஸ், பருப்பு வகைகள், கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.