நம் வீட்டின் கிட்சனில் மிக முக்கிய கருவியாக இருப்பது கத்தி தான். காய்கறி வெட்டும் பணியை மிக சுலபமாக முடித்துக் கொடுப்பது கூர்மையான கத்தி தான். அப்படி கத்தியை எவ்வாறு சாணைப்பிடித்து பயன்படுத்துவது என்றும், எந்த மாதிரியான கத்தியை வாங்க கூடாது என்றும் தற்போது பார்க்கலாம்.
முதலில் நம் கைகளுக்கு வலி ஏற்படுத்தாத கத்தியை தேர்வு செய்து வாங்க வேண்டும். கைகளால் பிடிக்கும் போதும், காய்கறிகளை வெட்டும் போதும் வசதியாக இருக்க வேண்டும். குறிப்பாக, சிறிய பற்கள் போன்று இருக்கும் கத்திகளை வாங்கக் கூடாது. இவை காய்கறி வெட்டுவதற்கு பயன்படாது. அதிக விலை கொடுத்து தான் கத்தி வாங்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. மலிவான விலையிலேயே நம் கைகளுக்கு வசதியாக இருக்கும் கத்தியை வாங்கலாம்.
அதேபோல், சாணைக் கல்லின் விலை சுமார் ரூ. 150 வரும். இதனை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், சாணைக் கல்லை எடுத்து ஒரு துணி மீது வைக்க வேண்டும். இப்போது, கத்தியின் மேற்புறத்தை நான்கு விரல்களால் அழுத்தி பிடித்து, சாணைக் கல்லின் நுனியில் இருந்து கத்தியை முன்னோக்கி அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறு இருபுறமும் சுமார் 20 முறை செய்தாலே கத்தி கூர்மையாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“