Advertisment

Kitchen Tips: கோழி இறைச்சி கெட்டுப் போய்விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது என்பது இங்கே!

கோழி சாப்பிடுவதற்கு நல்லதா? இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் அறிகுறிகள் இங்கே!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kitchen Tips

Tips to check the chicken meat has gone bad

உலகம் முழுவதும் உண்ணப்படும் மிகவும் பிரபலமான இறைச்சிகளில் கோழியும் ஒன்று. இது ஒரு சத்தான இறைச்சி, நீங்கள் எந்த வகையான உணவையும் செய்ய இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த சத்தான இறைச்சி மிக விரைவில் கெட்டுவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Advertisment

கோழி கெட்டுப்போகும் போது, ​​அதன் அமைப்பு மற்றும் சுவையில் மாற்றம் ஏற்படலாம், அது உங்களை நோய்வாய்ப்படுத்தலாம். கோழி சாப்பிடுவதற்கு நல்லதா? இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் அறிகுறிகள் இங்கே!

கோழி இறைச்சியின் நிறம்

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன், அதன் நிறத்தை எப்போதும் கவனிக்கவும். புதிய கோழி இறைச்சி, இளஞ்சிவப்பு நிறத்தில் வெள்ளை கொழுப்புத் துண்டுகளுடன் இருக்கும்.

கோழி இறைச்சியின் நிறம் சாம்பல்/பச்சை நிறமாகவும், கொழுப்புத் துண்டுகள் மஞ்சள் நிறமாகவும் இருந்தால், அது சாப்பிடுவதற்கு நல்லதல்லாத பழைய இறைச்சி ஆகும். எனவே நீங்கள் அதை உடனே நிராகரிக்க வேண்டும்.

சமைத்த கோழியைப் பொறுத்தவரை, அது எப்போதும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.

மேலும், சமைத்த கோழி இளஞ்சிவப்பு நிறத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இறைச்சி நன்றாக சமைக்கப்படவில்லை எனில்’ சால்மோனெல்லா நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

இறைச்சியின் அமைப்பு

அடுத்து, கோழியின் அமைப்பைக் கண்டறிவது, அது நுகரக்கூடியதா, இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்கு நிறைய சொல்லும்!

கோழி இறைச்சி, மெலிதாகவோ அல்லது பிசுபிசுப்பாகவோ இருந்தால், இறைச்சி புதியதாக இல்லை என்று அர்த்தம், உடனடியாக அதை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். புதிய கோழி இறைச்சி மெலிதாக இல்லாமல்- மென்மையாகவும், பளபளப்பாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்கும். நீங்கள் அதை வெட்டும்போது, ​​​​அது மெலிதான மற்றும் ஒட்டும் அமைப்பு இல்லாமல் கச்சிதமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

மெலிதான இறைச்சி உங்கள் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அப்படி இருந்தால், அது மோசமாகி விட்டது என்பதற்கான உறுதியான அறிகுறியாகும். இனி சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல.

சமைத்த கோழியைப் பொறுத்தவரை, இறைச்சி எப்போதும் உறுதியாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

வாசனை

சில நேரங்களில், கோழி கெட்டுப் போயிருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினமாகிவிடும், குறிப்பாக அது உறைந்திருக்கும் போது. அந்த நேரத்தில், நீங்கள் இறைச்சியின், வாசனை போன்ற மற்ற அறிகுறிகளை பார்க்க வேண்டும்.

கெட்டுப்போனதற்கான முதல் உறுதியான அறிகுறிகளில் ஒன்று அதன் துர்நாற்றம். சில நேரங்களில் அழுகிய முட்டைகளின் நாற்றம் அடிக்கும். புதிய கோழி இறைச்சி, மிகவும் லேசான வாசனையைக் கொண்டுள்ளது.

பூஞ்சை தொற்று

நிறமாற்றம் தவிர, கோழி இறைச்சி’ கெட்டுப்போகும் போது, ​​அதன் மேற்பரப்பில் பூஞ்சை உருவாவதையும் நீங்கள் கவனிப்பீர்கள்.

உணவை வீணாக்காமல் இருக்க பூஞ்சைகளை அகற்றுவது அல்லது பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டுவது பற்றி நீங்கள் நினைத்தால், அதை மறந்துவிடுங்கள். இறைச்சியில்’ உங்கள் கண்களுக்குத் தெரியாத பாக்டீரியா ஊடுருவக்கூடும் என்பதால், அதை உட்கொள்வது ஆபத்தானது மற்றும் உணவு விஷத்தை ஏற்படுத்தக்கூடும்.

பயன்பாட்டிற்கான தேதியை சரிபார்க்கவும்

நீங்கள் கடையில் இருந்து புதிய கோழி இறைச்சியை வாங்கும் போது, ​​அது காலாவதி தேதியுடன் வருகிறது, இது கோழி மோசமாகிவிட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்க எளிதான வழியாகும். எனவே, உங்களுக்குப் பிடித்த உணவைச் சமைப்பதற்கு முன் இந்தத் தேதியைச் சரிபார்ப்பது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment