பாத்ரூம் பக்கெட் மஞ்சள் கறையா இருக்கா? இந்த ஒரு பொருள் போதும் பளீச்சென மாறும்!

பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட், கப் போன்றவற்றில் இருந்து மஞ்சள் கறையை எவ்வாறு எளிதாக அகற்றுவது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக அதிக பணம் செலவு செய்து பொருட்கள் வாங்க வேண்டியதில்லை.

பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட், கப் போன்றவற்றில் இருந்து மஞ்சள் கறையை எவ்வாறு எளிதாக அகற்றுவது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக அதிக பணம் செலவு செய்து பொருட்கள் வாங்க வேண்டியதில்லை.

author-image
WebDesk
New Update
Bathroom cleaning

வீட்டை சுத்தமாக பராமரிப்பதே சவாலான காரியம். அதிலும், பாத்ரூமை சுகாதாரமாக வைத்திருப்பது கூடுதல் சவாலாக இருக்கும். அந்த வகையில் பாத்ரூம் பக்கெட், கப் மற்றும் டைல்ஸ் போன்றவற்றை எப்படி சுலபமாக சுத்தப்படுத்தலாம் என்று காணலாம்.

Advertisment

மஞ்சள் கறை நிறைந்திருக்கும் பக்கெட் மற்றும் கப் ஆகியவற்றை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, பல் துலக்க பயன்படும் பேஸ்டை, ஒரு ஸ்க்ரப்பரில் போட்டு கறை படிந்திருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் கறை நீங்கும்.

எனினும், சில சமயம் பக்கெட்டுகளில் அதிகப்படியான கறைகள் இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், பாத்ரூம் கழுவ பயன்படும் ஹார்பிக்கை பக்கெட்டுகளில் ஊற்றியும் கழுவலாம். இவ்வாறு செய்யும் போது பக்கெட்டுகளில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி விடும்.

இதேபோல், பாத்ரூமின் டைல்ஸ்களையும் சுலபமாக கழுவ முடியும். இதற்காக 5 ஸ்பூன் பிளீச்சிங் பொடி, 2 ஸ்பூன் சோடா உப்பு, துணி துவைக்க பயன்படும் சோப்பு பொடி 1 ஸ்பூன் ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். 

Advertisment
Advertisements

இந்தப் பொடியை பாத்ரூம் டைல்ஸ்களில் தூவி விட்டு, அதன் பின்னர் தேய்த்து கழுவலாம். இப்படி செய்தால் பாத்ரூம் டைல்ஸ்கள் புதியது போன்று மாறிவிடும்.

நன்றி - En Chinnanjiru Ulagam Youtube Channel

Best plants to keep inside your bathroom

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: