பாத்ரூமில் வட்ட வட்டமாக உப்புக் கறை... வெறும் பேக்கிங் சோடா போதும்; டைல்ஸ் பளபளக்கும்!
வீட்டின் பாத்ரூம் டைல்ஸில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை எப்படி சுலபமாக அகற்றுவது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்ய முடியும்.
வீட்டின் பாத்ரூம் டைல்ஸில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை எப்படி சுலபமாக அகற்றுவது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்ய முடியும்.
நோயற்ற வாழ்வு என்பது முதலில் இல்லங்களில் இருந்து தான் தொடங்குகிறது. அந்த வகையில் நாம் வசிக்கும் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்தால் நிறைய நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
Advertisment
குறிப்பாக, வீட்டில் இருக்கும் பாத்ரூமை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பலர் வீடுகளில் இருக்கும் பாத்ரூம் டைல்ஸ்களில் உப்புக் கறை அதிகப்படியாக படிந்து காணப்படும். இதனை போக்குவதற்கு நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை பயன்படுத்தி ஒரு கலவையை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 1 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இத்துடன் வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தப்படும் சோப்பு பொடியை மூன்று டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு ஸ்பூன் தூள் உப்பு, பேக்கிங் சோடா மற்றும் கால் கப் அளவிற்கு வினிகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதில் நாம் உபயோகப்படுத்தி இருக்கும் பொருட்களே பாத்ரூம் டைல்ஸ்களில் இருக்கும் உப்புக் கறையை அகற்ற போதுமானதாக இருக்கும். இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இறுதியாக பாத்ரூம் டைல்ஸ்களில் உப்புக் கறையாக இருக்கும் பகுதிகளில், இந்த நீரை தெளிக்க வேண்டும். அதன் பின்னர், 10 நிமிடங்கள் கழித்து துடைப்பம் அல்லது பிரஷ் கொண்டு டைல்ஸ்களை துடைக்கலாம். இவ்வாறு செய்தால் டைல்ஸில் இருக்கும் உப்புக் கறை சுலபமாக நீங்கி விடும்.
இந்த தண்ணீரை பயன்படுத்தி அடுப்பின் மேற்பகுதியையும் சுத்தப்படுத்தலாம். இதற்காக பணம் செலவளித்து தனியாக சோப்பு வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை கொண்டு நமக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும்.