5 ரூபாய் போதும்… பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென மாறும்; இதை டிரை பண்ணுங்க!
வீட்டின் பாத்ரூம் டைல்ஸில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை எப்படி சுலபமாக அகற்றுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்ய முடியும்.
வீட்டின் பாத்ரூம் டைல்ஸில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை எப்படி சுலபமாக அகற்றுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்ய முடியும்.
நாம் வசிக்கும் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்தால் நிறைய நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பாத்ரூமை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பலர் வீடுகளில் இருக்கும் பாத்ரூம் டைல்ஸ்களில் உப்புக் கறை அதிகப்படியாக படிந்து காணப்படும். இதனை போக்குவதற்கு நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை பயன்படுத்தி ஒரு கலவையை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
Advertisment
தேவையானப் பொருட்கள்:
சீயக்காய்
ஷாம்பு
Advertisment
Advertisements
தயிர்/புளித்த மாவு
தண்ணீர்
செய்முறை: சிறிய கின்னத்தில் தலைக்கு தேய்த்து குளிக்கக் கூடிய ஏதேனும் ஒரு சீயக்காய்த்தூளை சிறிதளவு கொட்டி அதனுடன் ஒரு பாக்கெட் ஷாம்பு சேர்த்து, புளிக்க வைத்த தயிர், தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும். இதில் நாம் உபயோகப்படுத்தி இருக்கும் பொருட்களே பாத்ரூம் டைல்ஸ்களில் இருக்கும் உப்புக் கறையை அகற்ற போதுமானதாக இருக்கும். இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இறுதியாக பாத்ரூம் டைல்ஸ்களில் உப்புக் கறையாக இருக்கும் பகுதிகளில், இந்த நீரை தெளிக்க வேண்டும். அதன் பின்னர், 10 நிமிடங்கள் கழித்து துடைப்பம் அல்லது பிரஷ் கொண்டு டைல்ஸ்களை துடைக்கலாம். இவ்வாறு செய்தால் டைல்ஸில் இருக்கும் உப்புக் கறை சுலபமாக நீங்கி விடும்.
இந்த தண்ணீரை பயன்படுத்தி அடுப்பின் மேற்பகுதியையும் சுத்தப்படுத்தலாம். இதற்காக பணம் செலவளித்து தனியாக சோப்பு வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை கொண்டு நமக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும்.