நம் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதே சவாலான காரியம் தான். அதிலும், வீட்டில் இருக்கும் கழிப்பறையை தூய்மையாக வைத்திருப்பது கூடுதல் சிரமமாக இருக்கும். குறிப்பாக, வாரம் ஒரு முறையாவது வீட்டின் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஒரு வீட்டின் கழிப்பறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். அந்த வகையில் வீட்டின் கழிப்பறையை எப்படி சுத்தமாக பராமரிக்கலாம் என்று தற்போது காணலாம். இதன் செயல்முறை மிக எளிமையாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் காலாவதியான 3 மாத்திரைகளை இடித்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கப்பில் போட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் டீத்தூள், இரண்டு ஸ்பூன் சோப்பு பௌடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இதனை வீட்டில் இருக்கும் கழிப்பறை, வாஷ் பேசின் மற்றும் டைல்ஸ்களில் நன்றாக ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதன் பின்னர், இந்தக் கலவையை தெளித்த இடங்களை முற்றிலும் தேய்த்துக் கழுவலாம். குறிப்பாக, கை வலிக்க தேய்த்துக் கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. லேசாக கழுவினாலே சுத்தமாகி விடும்.