தோசை பிய்ஞ்சு பிய்ஞ்சு வருதா? கல் மேல இந்தப் பொருள் சேர்த்து பாருங்க!
தோசைக் கல்லை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் தோசை பிய்ந்து போகாமால் சீராக சுட்டு எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
தோசைக் கல் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு தோசை பிய்ந்து போகாமல் வரும். அந்த வகையில் தோசைக் கல்லை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று தற்போது காணலாம்.
Advertisment
அடுப்பை பற்ற வைத்து அதன் மீது தோசைக் கல்லை வைக்க வேண்டும். இப்போது தோசைக் கல்லின் மேற்பகுதியில் வினிகர், லெமன் சால்ட் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இதையடுத்து, ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி தோசைக் கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.
இதையடுத்து, தோசைக் கல் மீது ஸ்டீல் ஸ்க்ரப்ரை வைத்து தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும் போது அதில் இருக்கும் பெரும்பாலான எண்ணெய் பிசுக்குகள் நீங்கி விடும். இதன் பின்னர், ஒரு துணி வைத்து தோசைக் கல்லை துடைக்க வேண்டும்.
இப்போது, தோசைக் கல் ஓரளவிற்கு சுத்தமாகி இருக்கும். பின்னர், இதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இதற்கு அடுத்ததாக பாத்திரம் கழுவ பயன்படும் சோப் கொண்டு தோசைக் கல்லை கழுவ வேண்டும்.
Advertisment
Advertisements
இப்படி செய்தால் தோசைக் கல் புதியது போன்று மாறி விடும். இறுதியாக தோசை சுட்டு எடுப்பதற்கு முன்பாக, ஒரு முட்டையை இதில் உடைத்து ஊற்றி ஆம்லெட் போட வேண்டும். அதன் பின்னர், தோசை சுட்டு எடுத்தால் அவை சீராக பிய்ந்து போகாமல் வரும்.