தீயில் கருகிப் போன கேஸ் பர்னர்... சுடு தண்ணீருடன் கொஞ்சம் இந்த சாறு; நல்ல ரிசல்ட் இருக்கு!
நம் வீட்டில் தினசரி பயன்பாட்டில் இருக்கும் கேஸ் பர்னரை எவ்வாறு புதியது போன்று மாற்றலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக சில பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது.
நம் வீட்டில் தினசரி பயன்பாட்டில் இருக்கும் கேஸ் பர்னரை எவ்வாறு புதியது போன்று மாற்றலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக சில பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது.
நம்முடைய வீட்டில் நாள்தோறும் பயன்பாட்டில் இருக்கும் பொருள் என்று பார்த்தால், கேஸ் அடுப்பு முதன்மையான இடத்தைப் பெறும். காலை காபி போடுவதில் தொடங்கி இரவு உணவு சமைப்பது வரை ஓய்வின்றி இருக்கும் சாதனம் கேஸ் அடுப்பு தான்.
Advertisment
அதன் பயன்பாட்டின் காரணமாக கேஸ் பர்னர் தீயில் கருகி பார்ப்பதற்கு பழையது போன்று காட்சியளுக்கும். இதனால் சிலர் புதிய கேஸ் பர்னர் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஒரு சிம்பிளான ட்ரிக் மூலம் கேஸ் பர்னரை புதியது போன்று நம்மால் மாற்றி விட முடியும்.
கேஸ் பர்னரை அகலமான பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு சுடுதண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் எலுமிச்சை சாறி பிழிந்து அதன் தோலையும் அந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொள்ளலாம். இத்துடன் ஒரு பாக்கெட் இனோ பொடியை போட்டு அப்படியே மூடி வைக்க வேண்டும்.
இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து கேஸ் பர்னரை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து விடலாம். இப்போது, தேவையான அளவு விம் லிக்யூடை எடுத்துக் கொள்ளலாம். இதனை ஒரு பழைய டூத் பிரஷில் எடுத்து கேஸ் பர்னரில் தேய்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
இவ்வாறு தேய்த்த பின்னர், கேஸ் பர்னரை தண்ணீர் கொண்டு துடைத்து விட்டு, எலுமிச்சை தோல் கொண்டு மீண்டும் தேய்க்க வேண்டும். இதையடுத்து, சாதாரண தண்ணீரில் மீண்டும் கேஸ் பர்னரை கழுவி எடுக்கலாம். இப்படி செய்தால், கேஸ் பர்னர் பார்ப்பதற்கு புதியது போன்று காட்சியளிக்கும்.