இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 250-300 விட அதிகமாகும்போது அதற்கான சிகிச்சை முறைகளை எடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், இயற்கையாக எடுக்கக் கூடிய மருந்துகள் நமது உடலிலுள்ள கணையத்தில் பீட்டா செல்களை தூண்டும் வகையில் இருக்க வேண்டும். அதிகளவில் மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளவர்கள், ஒழுங்கற்ற முறையில் உணவு பழக்கம் உள்ளவர்கள், இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாதவர்கள், பரம்பரை ரீதியாகவும் சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சுவைக்கு நேர் எதிராக உள்ள உணவுகளான முளைகட்டிய பயிர்கள், தானிய வகைகள், வெந்தயம், கருப்பு எள்ளு உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடும் போது சர்க்கரை நோய் குறைய வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால் உடலில் தசைகள் மற்றும் எலும்புகள், நரம்புகள் பாதிக்கப்படும் என்பதால், சர்க்கரைக்கு எதிராக இருக்கக் கூடிய உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்கிறார் மருத்துவர் நித்யா.
கசப்பு என்றால் வேப்ப மரம்தான் என்பார்கள். ஒரு தாவரத்தின் அனைத்து பாகங்கள் மருந்தாக பயன்படுத்து சித்த மருத்துவத்தில் உள்ளது. அதில் ஒரு வகைதான் பிசின்கள். வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கூடிய வேப்ப பிசின் மருந்து கடைகளில் கூட கிடைக்கிறது. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப பிசினில், சர்க்கரை நோயை குறைக்கும் தன்மையுடையது என்கிறார் மருத்துவர் நித்யா.
வேப்பம் பிசினை லேசாக வறுத்து எடுத்து அரைத்து அதனுடன் சிறிதளவு 2 சொட்டு நெய் சேர்த்து சாப்பிடலாம். சிறுகுறிஞ்சான் சாப்பிடும்போது சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை எதுவாக இருந்தாலும் நீக்கக்கூடியது. வேப்பம் பிசின் மற்றும் சிறுகுறிஞ்சான் ஆகிய இரண்டையும் பொடியாக்கி ஒரு அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீரில் கலந்து இரு வேளை உணவுக்கு முன் சாப்பிடலாம். 15 முதல் 20 நாட்களில் மாற்றம் தெரியவரும் என்கிறார் மருத்துவர் நித்யா.
மருதம்பட்டை கசாயம்:
சர்க்கரை நோயாளிகள் நரம்பு மற்றும் இதயத்தை வலுப்படுத்த மருதம்பட்டை கசாயம் குடித்தால் போதும். 3 டம்ளர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு மருதம்பட்டை பொடி சேர்த்து உணவிற்கு பின் சாப்பிட வேண்டும். காலை, இரவு என ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வருவதால் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு உள்ளது என்கிறார் மருத்துவர் நித்யா.