உணவுப் பழக்கவழக்கத்தாலும் வெயிலில் செல்வதால் முகத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர் கார்த்திகேயன் ஐஸ்கட்டி, புதினா வைத்து ஒரு டிப்ஸ் கூறியுள்ளார். அது என்ன என்று பார்ப்போம். முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க என்ன செய்யலாம் என்பது குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறியதை பற்றி பார்க்கலாம்.
Advertisment
முகத்தில் தொடர்ந்து எண்ணெய்ப் பசை வழியும் பிரச்னை இருக்கிறது என்றால் நம்முடைய தோலில், செபேசியஸ் சுரப்பி (Sebaceous gland) என்று ஒரு சுரப்பி உள்ளது. இது இயற்கையாகவே எண்ணெய் திரவத்தை சுரந்துகொண்டிருக்கும். இது வெயிலில் இருந்து தோலைப் பாதுகாக்கிறது. இது அளவுக்கு மிஞ்சி போகும்போது, அழுக்குகளுடன் சேர்ந்து முகத்தில் பரு, அக்னி, பருக்கள் பெரியதாவது நடந்துகொண்டே இருக்கும். ஆனால், இதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். எனவே தினசரி சரும பராமரிப்பு என்பது மிக முக்கியம்.
ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட சுத்தமான ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து ஒத்தி, மசாஜ் போல செய்யுங்கள். இதன் மூலம் தோலில் உள்ள நுண் ஓட்டைகள் அடைபட்டு எண்ணெய் வழிவது தடுக்கப்படும்.
அடுத்து புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு அந்த தண்ணீரை ஆற வைத்து, ஒரு பச்சு எடுத்து, அந்த தண்ணீரைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் வழுவழுன்னு வழியும் எண்ணெய் பசையை நீக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து, மஞ்சள் பகுதியை நீக்கி, நுங்கு மாதிரியான அந்த ஜெல்லை முகத்தில் தடவ வேண்டும். நன்றாக ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
அதே போல, வெள்ளரிக்காயை தயிரில் ஊறவைத்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்தபின், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் ஃபிரஷ்ஷாக இருக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.