புடவை அடிக்கடி ட்ரை க்ளீங் தர முடியவில்லை. பட்டு புடவையை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியவில்லையா? அப்போ வீட்டிலேயே ட்ரை க்ளீங் செய்யுங்கள்.
வீட்டிலேயே எளிமையாக ட்ரை கிளீனிங் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் அதற்கு தேவையான புடவைகளை எல்லாம் எடுத்துக் கொள்ளவும். ஒரு பக்கெட்டில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது வாசனைக்கு ஷாம்போ அல்லது கம்போர்ட் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
best way to clean silk sarees|how to wash silk saree at home
நுரை இருக்கக்கூடாது வெறும் தண்ணீர் தான் இருக்க வேண்டும். அதே மாதிரி அந்த ஷாம்பூம் அனைத்து பக்கமும் பரவி தண்ணீருடன் கலந்து இருக்க வேண்டும்.
அப்போதுதான் அழுக்கு தேய்த்து எடுக்கும் போது நன்றாக வரும். அழுக்கு உள்ள இடத்தில் எல்லாம் ஈரத் துணியை வைத்து துடைத்து எடுக்கவும்.
அழுக்கு வரும் வரை நன்றாக தேய்க்கவும். தேய்க்கும் துணி மெல்லிதாக துவைத்த சுத்தமான துணியை பயன்படுத்தவும். பின்னர் இதனை நிழலில் போட்டு காய வைக்கவும். இதே மாதிரி தான் ஜாக்கெட்டுகளிலும் செய்யலாம். பின்னர் இந்த புடவையை தேய்க்க வேண்டும். அதற்கு அயன் பாக்ஸில் மிதமான சூடு வைத்து தேய்த்து மடித்து கொள்ளவும்.
துணி நல்ல வாசனையாகவும் புதிது போன்று பளபளப்பாகவும் இருக்கும்.இனி வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றி ட்ரை க்ளீனிங் செய்யுங்கள்.