Advertisment

கோடை சுற்றுலாக்கு போறீங்களா? அப்படியே இதையும் படிச்சிட்டுப் போங்க...

இயற்கைச் சீரழிவுகளும் ஏற்படலாம். அவற்றின் உச்சக்கட்டம் அமில மழை (Acid rain)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tips to live in Pollution free environment - மாசடைந்த இடங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்

Tips to live in Pollution free environment - மாசடைந்த இடங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்

ஷாந்தினி

Advertisment

கோடை விடுமுறையை கழிக்க மக்கள் பல இடங்களை நாடி செல்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் பல சுகாதார பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கின்றனர். அதில் முக்கியமாக மாசடைந்த இடங்களில் மாட்டிக்கொள்வது.

மேலும் சுத்தமாக இருப்பதற்கு மக்கள் தினம் தினம் பாதுகாப்பான இடங்களைத்தேடி அலைகின்றனர். முக்கியமாக சுத்தமான தண்ணீரும் போதிய சுகாதாரமும் இல்லாத நாடுகளில் இந்நிலை ஏற்படுகிறது. சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் நோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை அவர்களின் வாய்க்குள் செல்லும் கிருமிகளால்தான் உண்டாகின்றன. இந்தக் கிருமிகள் அழுக்கான கைகள், அசுத்தமான உணவு அல்லது அசுத்தமான தண்ணீர் வழியாக அவர்களுடைய வாய்க்குள் சென்றுவிடுகின்றன.

எனவே கோடைகால விடுமுறைக்காலங்களைக் கழிப்பதற்காக சுற்றுலா செல்பவர்கள் மாசடைந்துள்ள இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து கவனிக்க வேண்டும்.

சுத்தமான காற்று

உலக சுகாதார நிறுவனம் (WHO) 1600 உலக நகரங்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பெருநகரங்களிலேயே ஆக மோசமான நிலையில் தில்லியின் காற்றுச் சூழல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மக்கள் காற்று மாசினால் இறந்து போகின்றனர் என்றும் காற்று மாசுபாடு தான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி நுரையீரல் பாதுகாப்பு மையம் (Lung Care Foundation) எனும் அரசுசாரா தொண்டு நிறுவனம் தில்லியில் மருத்துவர்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய அவ்வமைப்பின் நிறுவனரும் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருமான அரவந்த் குமார், தில்லியின் காற்று மாசுபாட்டின் விளைவு சராசரியாக நாளொன்றுக்கு 14ல் இருந்து 20 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்கும் குப்பை, எதிலும் குப்பை! நம் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது மாசு. நமக்குத் தெரிந்தே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது இயற்கை. அதிலும், இன்று மனிதர்களால் மிக மோசமாக அசுத்தமாக்கப்பட்டு வரும் ஒன்று, காற்று.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை ஆகியவை ஆபத்தானவை. அங்கு வேலை பார்ப்பவர்கள், முன்னெச்சரிக்கையோடு, பொருத்தமான பாதுகாப்பு சாதனங்களை அணிந்துதான் பணிபுரிய வேண்டும். எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், தொடர்ந்து பணி செய்தால், அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் நம் உடலுக்கு மிகப்பெரிய எதிரி. நம் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். அவசரமில்லாத, சாதாரண சூழல்களில், பொது வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

சுற்றுலா செல்லப்போகும் இடத்தின் பருவ நிலை

சுற்றுலா எங்கு செல்லப்போகின்றோம் என திட்டமிடும் போது அந்த ஊரின் பருவ நிலை என்பது மிக முக்கியம். அதுவும் டெல்லி போன்ற நகரங்களுக்கு செல்லும் போது மிக அவதானம் தேவை. பண்டிகை மற்றும் குளிர் காலங்களில் பனி மூட்டம் அதிகம் காணப்படும் போது வகனங்களில் இருந்து வெளியேறும் புகை விரைவில் கலைந்து செல்லாது. அதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

எனவே எந்த ஊருக்கு செல்லப்போகின்றோமோ அந்த ஊரின் பருவ நிலையை கவனத்தில் எடுப்பது முக்கியம்.

முகமூடி

மாசுபட்ட நகரம் அல்லது காட்டுப்பகுதிக்குச் செல்லும் போது ஒரு பாதுகாப்பான முகமூடியை அணிவது நல்லது.

கடுமையான மாசு நாளில், இது ஒரு நல்ல பொருள் " இது எளிதாக, மிகவும் பயனுள்ள மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான கிடைக்கும். தற்போது காற்று மாசு அதிகம் உள்ள டெல்லி, சீனா போன்றவற்றில் முகமூடி அணிவது வழக்கமாகி விட்டது.

உட்புற காற்று சுத்தமானதா என பார்க்க வேண்டும்

வெளியில் இருக்கும் காற்றின் தரம் மோசமாக இருக்கும் போது, நீங்கள் ஹோட்டலுக்குள் இருந்தால் அங்குள்ள காற்று நன்றாக இருக்க வேண்டும். விருந்தினர்கள் காற்று தரம் அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சலுகைகள் செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதே போல் ஓய்வெடுத்தல் மற்றும் தூங்குவதற்கு வசதியாகவும் ஹோட்டல்கள் உள்ளன.

மேலும் நீங்கள் ஒரு ஹோட்டலில் தங்கினால் அங்கு உள் இருக்கும் காற்று அசுத்தமானதாக நீங்கள் உணர்ந்தால் அதை சரி செய்த பின் அந்த ஹோட்டலுக்குள் செல்ல வேண்டும்

காற்று மாசுபாட்டின் விளைவுகளின் அறிகுறிகள்

இந்தியாவிலோ வீட்டுக்கொரு வாகனம் என்கிற அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கைத் தாறுமாறாகப் பெருகியிருக்கிறது. இன்னொரு பக்கம், உயர்தர எரிபொருள்கள் (குறைந்தளவு கார்பன்-மோனாக்ஸைடை வெளியிடும்) நமக்குக் கிடைப்பதில்லை. தரத்தில் குறைந்த எரிபொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது, காற்றில் நஞ்சு அதிகமாகக் கலக்கும்; சுற்றுச்சுழல் பாதிக்கப்படும்; அதன் காரணமாக நமக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பனிக்காலத்திலும், கோடைகாலத்திலும் இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். பனிக்காலத்தில், சரியான காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், நச்சுக்காற்று பல மணிநேரங்களுக்கு மேலெழ முடியாமல், நமக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். கோடைகாலத்தில், வாகனப் புகைகளோடு சேர்த்து, வறண்ட பகுதிகளும் நச்சுக்காற்றை உமிழும்.

இவை, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் தொடர்பான தொற்று பாதிப்புகள், கட்டி, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு (Lung Attack), இதய பாதிப்புகள், நுரையீரல் புற்றுநோய், சுவாச பாதிப்புகள், மூக்கில் இருக்கும் நுகர்வுத்திறன் குறைவது போன்றவற்றை ஏற்படுத்தும். இறப்பை ஏற்படுத்தும் நோய்களில், இதயநோய் மற்றும் புற்றுநோய்களுக்கு அடுத்து, சுவாசக் கோளாறுகள்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. `காற்று மாசுபடுவதால், உடல்நல பாதிப்புகள் மட்டுமல்ல... இயற்கைச் சீரழிவுகளும் ஏற்படலாம். அவற்றின் உச்சக்கட்டம் அமில மழை (Acid rain). இது ஏற்பட்டால், கடுமையான நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, மாசு கலந்த நீர்தான் நமக்குக் கிடைக்கும்’ என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment