நம் வீடுகளில் பெரும்லாலும் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லைகள் இருக்கும். இதனால், உணவு பொருள்கள் கெட்டுவிடும் அபாயமும் உள்ளது. இவற்றை தடுக்க செயற்கையான பல பொருள்கள் கடைகளில் கிடைக்கின்றன. எனினும், இயற்கையான வழியில் வீரியமாக இவற்றை எவ்வாறு தடுப்பது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முதலில் ஒரு பச்சை மிளகாயை எடுத்து அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுமார் ஒரு கிளாஸ் தண்ணீரில் போட வேண்டும். இதேபோல், இரண்டு பூண்டுகளை சிறிய துண்டுகளாக நறுக்கி இத்துடன் சேர்க்க வேண்டும். பின்னர், அந்த பாத்திரத்தை சுமார் 1 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்னர், இத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையை பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் வடிகட்டி ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் துவாரம் போட்டு, கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் தொல்லை இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகளை தடுக்க முடியும். இயற்கை முறையில் இதனை செய்வதால், இதற்கான வீரியமும் அதிகமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“