ஒரு தட்டு தண்ணீரில் ஒரு ஸ்பூன் விடுங்க... சுத்தமான தேன் கண்டறிவது இப்படித்தான்: டாக்டர் ஆஷா லெனின்
நாம் வாங்கும் தேன் சுத்தமானதா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். இதற்கான, வழிமுறையையும் அவர் செய்து காண்பித்து விளக்கம் அளித்துள்ளார்.
நாம் வாங்கும் தேன் சுத்தமானதா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். இதற்கான, வழிமுறையையும் அவர் செய்து காண்பித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் பலவற்றில் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு ஏராளமான சத்துகள் கிடைக்கும்.
Advertisment
அந்த வரிசையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு மருந்துகள் தயாரிக்க தேன் பயன்படுகிறது. இது தவிர சில மருந்துகளை தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய மருத்துவ பயன்கள் வாய்ந்த தேன், சுத்தமானதாக இருந்தால் தான் நம் ஆரோக்கியம் மேம்படும். தற்போதைய நிலவரப்படி சந்தையில் பல்வேறு கலப்பட தேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு சுத்தமான தேன் போன்று இருப்பதால், அவற்றை கண்டறிவது கடினமாக இருக்கும்.
சுத்தமான தேனை கண்டுபிடிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, நாம் வாங்கி பயன்படுத்தும் தேன் சுத்தமானதா என்பதை கண்டறிவதற்கான டிப்ஸை மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
ஒரு தட்டில் சிறிதளவு தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். இப்படி செய்யும் போது, சுத்தமான தேனாக இருந்தால் தண்ணீரில் கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். ஆனால், சர்க்கரை பாகு தண்ணீரில் கரைந்து விடும். இதன் மூலம் சுத்தமான தேனை கண்டறியலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார்.
இதேபோல், சுத்தமான தேன் இருக்கும் இடத்தில் எறும்பு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் தேனை கலப்படம் இல்லாமல் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
நன்றி - Dr.Asha Lenin Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.