வீட்டுக்குள் சுற்றும் சிகரெட் வாடை, அகற்ற என்ன செய்யலாம் ?

பேச்சிலர்சாக இருக்கும் போது கவலை இல்லை. குடும்பமாக இருக்கும் போது வீட்டிற்குள் சுத்தும் சிகரெட் புகை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

Tobacco Odor Removal, how to get rid of cigarette smell
Tobacco Odor Removal, how to get rid of cigarette smell

புகைப்பிடித்தல் எல்லோருக்கும் பொருந்தாது . புகைப்பிடிப்பவர்கள் நமது அருகில் நின்றாலே தலைச்சுற்றல் ஏற்பட்டு விடும்.

ஆண்களில் பலருக்கும் பாத்ரூம் போகும் போது சிகரெட் பிடிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு வீட்டில் பலர் இருக்கும் போது, அவர்கள் பிடிக்கும் புகை வீட்டிற்குள்ளேயே தங்கி விடும்.  இதனால் சிலருக்கு மூச்சுத் திணறல்கூட ஏற்படும். அதுவும் ஏசி காரில் இருக்கும் சிகரெட் வாடையை சகித்துக்கொள்ள முடியாது.

எங்கும் செல்லும்:

அனைத்து பொருட்களிலும் ஊடுருவிச் செல்லும் தன்மைக் கொண்டது சிகரெட் புகை. உதாரணமாக கார்பெட், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் ஊடுருவிச் செல்லும் திறன் புகைக்கு உண்டு. காற்றோடு கலந்துள்ள புகை வெளியில் போயிடும். ஆனால் மற்ற பொருட்களில் ஊடுருவியுள்ள புகை போவதற்கு ஆகக்கூடிய கால அளவு மிகப்பெரியது. பேச்சிலர்சாக இருக்கும் போது கவலை இல்லை. குடும்பமாக இருக்கும் போது இது பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே வீட்ற்குள் உள்ள சிகரேட் புகையை கீழே கொடுக்கப்பட்டுள்ளன 8 வழிகள் மூலம் வெளியேற்றலாம்.

நமது சமையல் அறையில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு இந்த புகையை எப்படி வெளியேற்றலாம் என பார்ப்போம்.

1. பேக்கிங் சோடாவை துர்நாற்றம் அதிகமுள்ள இடங்களில் தெளிக்கவும்.

2.வினிகரை கொதிக்க வையுங்கள்

3.காப்பிக் கொட்டைகளை துர்நாற்றமுள்ள இடத்தில் வையுங்கள்

4. ஒரு கப்பில் சார்கோலை திறந்த வெளியில் வையுங்கள்

5.இரண்டாக நறுக்கப்பட்ட ஆப்பிள்

6.வெண்ணிலா ஃப்ளேவரில் ஊறவைக்கப்பட்ட காட்டன் பந்துகள்

7. அம்மோனியா நீரைக் கொண்டு தரையை துடையுங்கள்

8.கார்பன் வடிகட்டியுடன் கூடிய காற்று சுத்திகரிப்பான்

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா ஒரு சிறந்த துர்நாற்றப் போக்கி. துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளில் பேக்கிங் சோடாவைக் கொட்டலாம். இந்த புகை பொருட்களிலும் ஊடுருவி இருக்கும் என்பதால் பேக்கிங் சோடாவைக் கொட்டலாம். சிறுது நேரம் கழித்து அதை துடைத்து எடுத்து விடுங்கள்.

சார்கோல்: சார்கோலுக்கு சிகரெட் போன்ற துர்நாற்றங்களை ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால் சிகரெட் துர்நாற்றத்தை விரைவில் வெளியேற்றும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கலாம்.

காபி கொட்டைகள்: காப்பிக் கொட்டைகளில் இருந்து வரும் அதீத வாசனை துர்நாற்றத்திலிருந்து தற்காலிகத் தீர்வைத் தரும். சிகரெட் வாடையிலிருந்து உங்களை பாதுகாக்க இது பெரிதும் உதவுகிறது.

வென்னிலா: வென்னிலா ஃப்ளேவரை காட்டன் பந்து அல்லது பஞ்சுகளில் நனைத்து துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளில் வைக்க வேண்டும். 1/2 டேபிள் ஸ்பூன் வென்னிலாவை எடுத்து 20 நிமிடம் மெதுவாக சூடேற்றவும். இந்த வாசனை காற்றில் கலந்து துர்நாற்றத்தை நீக்கும்.

ஆப்பிள் சாறு அல்லது வினிகரை பயன்படுத்தி சிகரெட்டினால் வரும் துர்நாற்றத்தை நீக்கமுடியும் . வினிகரை கொதிக்க வைத்து உடைகளிலும் அதை தேய்க்கும் பொழுது உடை நறுமன்முள்ளதாக மாறுகிறது. அறை முழுக்க பரவும் வகையில் எடுத்துச் செல்ல வேண்டும்.  துர்நாற்றத்தைக் கவரும் தன்மை ஆப்பிளுக்கு இருப்பதால் விரைவில் துர்நாற்றத்தை வெளியேற்றும். ஆப்பிளை இரண்டாக நறுக்கி துர்நாற்றம் வீசும் இடங்களில் வைத்தால் போதும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tips to get rid of cigarette smell tobacco odor removal easy tips cigarette smell removal tips

Next Story
விஜயதசமி வித்யாரம்பம் – பிள்ளைகளை அன்றே பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் விரும்புவது ஏன்?vijayadasami vidyarambham tamil nadu school admission - விஜயதசமி வித்யாரம்பம் - பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com