வீட்டில் நிறைய இடங்களில் அதுவும் கிச்சனில் அதிகப்படியாக கரப்பான் பூச்சி தொல்லைகள் இருக்கிறதா? அப்போ இந்த மாதிரி ஒரு சில டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க. கோமுஸ் லைப் ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை எப்படி விரட்டுவது என்று கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
டிப்ஸ் 1: இரவில் எப்பொழுதும் கிச்சனை சுத்தமாக்கி விட வேண்டும். பாத்திரங்களை கழுவி விட்டு கிச்சன் மேடை அடுப்பு ஆகியவற்றையும் சுத்தமாக எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் துடைத்து கழுவி எடுத்து விட வேண்டும். அதேபோல மீதமான உணவுகள் தேவையில்லாத உணவுகள் ஆகியவற்றையும் எடுத்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.
கிச்சன் ஒருமுறை கூட்டி துடைத்துவிட்டு வாசனை ஸ்ப்ரே ஏதாவது ஒன்றை அடிக்கலாம். கிச்சன் சிங்குகளையும் நன்றாக கழுவி விட வேண்டும். சாப்பாடு கழிவுகள் இல்லாதபடி கிச்சன் சின்குகளை சுத்தமாக வைக்கவும். எண்ணெய் பிசுக்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
டிப்ஸ் 2: கிச்சன் சிங்கில் தண்ணீர் போகும் இடத்தில் வேஸ்டான ஒரு பாக்ஸ் வைத்து அடைத்து விடவும்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 3: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் மூன்று கிராம்பு இடித்து சேர்க்கவும். பின்னர் உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து கரைத்து விடவும். பின்னர் இந்த தண்ணீரை கிட்சன் சிங் அடுப்பு மேடை அடுப்பு எல்லா இடங்களிலும் தெளித்து விடவும்.
டிப்ஸ் 4: அடுத்து ஒரு சின்ன கப்பில் சர்க்கரை சேர்த்து அதில் சோப்பு பவுடர் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் இதை அடுப்புக்கு கீழே அல்லது கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களிலோ வைத்துவிட வேண்டும்.
டிப்ஸ் 5: பின்னாடி இன்னொரு சின்ன டப்பாவில் புளிச்ச தயிர், சர்க்கரை சேர்த்து கரைத்து தேங்காய் எண்ணெய் சிறிது கையில் தெளித்து டப்பாவில் அனைத்து பக்கங்களிலும் தேய்த்து விடவும். பின்னர் இதனையும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் வைத்து விடலாம். பின்னர் காலையில் வந்து பார்த்தால் சுற்றி திரியும் கரப்பான் பூச்சிகள் அனைத்தும் அந்த டப்பாக்கள் விழுந்து இறந்து கிடக்கும்.