5 வகை புண்ணாக்கு கரைசலை 3 நாள் ஊறவைத்து தெளியுங்கள்… செடி முழுவதும் மல்லிகை பூக்கும்!
மல்லிகை செடியை இயற்கையான முறையில் எவ்வாறு எளிமையாக பராமரிப்பது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் மல்லிகை பூக்களின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
பெரும்பாலானோர் தங்களுக்கு இருக்கும் குறைவான இடத்திலும் கூட தோட்டம் அமைத்து பூக்கள் வளர்க்க வேண்டும் என விருப்பப்படுவார்கள். அந்த வகையில், இந்த சீசனுக்கு ஏற்றார் போல் மல்லிகை செடியை எப்படி பராமரிக்க வேண்டும் எனக் காணலாம்.
Advertisment
அதன்படி, மல்லிகைச் செடியை சரியான அளவில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். செடியில் இருக்கும் பழைய இலைகள் அனைத்தையும் சீராக வெட்டி விட வேண்டும். அப்போது தான் பூக்கள் பூப்பதற்கு வசதியாக இருக்கும்.
மல்லிச் செடிக்கு பிரதானமாக சூரிய ஒளி தேவைப்படும். அதனால், சூரிய ஒளி தாராளமாக படும் இடத்தில் இதனை வைக்க வேண்டும். இதேபோல், மழைக் காலத்தில் எந்த விதமான உரமும் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயற்கையான மழை நீரே போதுமானதாக இருக்கும்.
வெயில் காலத்தில் தான் மல்லிச் செடிகளுக்கு உரம் வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்காக 5 வகை புண்ணாக்குகளை மல்லிச் செடிக்கு உரமாக பயன்படுத்தலாம். இதில், கடலை புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு அடங்கும்.
Advertisment
Advertisements
அதன்படி, இந்த புண்ணாக்கு கலவையை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் சுமார் 3 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் புண்ணாக்கு நன்றாக புளித்து விடும். இதன் பின்னர், இந்த புண்ணாக்கு கரைசலை மல்லிச் செடிகள் மீது தெளிக்கலாம். இதனால் செடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, பூக்கள் அதிகமாக பூக்கத் தொடங்கும்.
இதில் கடலை புண்ணாக்கு இருப்பதால் பூச்சிகள் வரும் அச்சப்பட தேவையில்லை. அதனுடன் வேப்பம் புண்ணாக்கும் கலந்திருப்பதால் பூச்சிகள் மற்றும் புழுக்கள் வராது. இது போன்ற டிப்ஸ்களை தொடர்ச்சியாக பின்பற்றினால் மல்லிகை பூக்கள் அதிகமாக பூத்துக் குலுங்கும்.