நம் வீட்டிலேயே புதினா செடி எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான ஐடியாக்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். புதினா செடியின் பராமரிப்பும் எளிமையானதாகவே இருக்கும்.
வீட்டிற்கு சமையலுக்காக வாங்கிய புதினாக்கட்டில் இருந்து சில தண்டுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த தண்டுகள் தடிமனாக இருக்க வேண்டும். சிறிய தொட்டியில் புதினா வளர்க்கப் போகிறோம் என்றால் 5 தண்டுகளே போதுமானது.
மேலும், புதினா தண்டில் இருந்து பெரிய இலைகளை பறித்து விடலாம். ஆனால், சிறிய இலைகளை பறிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இதைத் தொடர்ந்து, ஒரு கிளாசில் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, புதினா தண்டுகள் பாதியாக மூழ்கும் அளவிற்கு மட்டுமே நீர் நிரப்ப வேண்டும்.
அதன்பின்னர், புதினா தண்டுகளை கிளாஸில் நிரப்பிய தண்ணீரில் வைக்க வேண்டும். இவ்வாறு 7 நாள்கள் வைக்க வேண்டும். மேலும், இந்த தண்ணீரை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இந்த புதினா தண்டு இருக்கும் கிளாஸை சூரிய வெளிச்சம் ஓரளவிற்கு படும் இடத்தில் வைக்கலாம். உதாரணமாக ஜன்னல் ஓரத்தில் வைக்கலாம்.
7 நாள்களுக்கு பின்னர் புதினா தண்டுகளில் இருந்து வேர் விடத் தொடங்கும். இந்த தண்டுகளை தற்போது தொட்டியில் ஊன்றி வளர்க்கலாம். சாதாரண செம்மண்ணில் வைத்தே புதினாவை வளர்க்க முடியும். வாழைப்பழ தோல் கரைசல், அரிசி கழுவிய நீரை ஊரமாக ஊற்றலாம். மேலும், காலை மற்றும் மாலை என இருவேளைகள் தண்ணீர் ஊற்ற வேண்டும். சூரிய ஒளி கம்மியாக படும் இடத்தில் வைத்து புதினாவை வளர்க்க வேண்டும். இந்த டிப்ஸ்கலை ஃபாலோ செய்தால் புதினா செடிகள் நன்றாக வளரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“