சின்ன செடியிலும் நிறைய பூக்கள்… முல்லை செடி பூத்து குலுங்க இந்த கரைசல் டிரை பண்ணுங்க!
முல்லைச் செடியில் எவ்வாறு அதிகமான பூக்களை பூக்கச் செய்யலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக வீட்டிலேயே ஒரு கரைசலை தயாரித்து உபயோகப்படுத்தலாம்.
முல்லைச் செடியில் எவ்வாறு அதிகமான பூக்களை பூக்கச் செய்யலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக வீட்டிலேயே ஒரு கரைசலை தயாரித்து உபயோகப்படுத்தலாம்.
வீட்டிற்கு ஒரு பசுமையான தோட்டம் அல்லது பால்கனியில் வண்ணமயமான பூச்செடிகள் இருந்தால், அந்த இடமே ஒரு தனி அழகைப் பெறும். பூச்செடிகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, நம் மனதிற்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. பூச்செடி வளர்ப்பு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், இயற்கையோடு ஒன்றிணைவதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது.
Advertisment
பூச்செடிகளை வளர்க்கத் தொடங்குவது மிகவும் எளிது. முதலில், உங்களுக்கு விருப்பமான மற்றும் உங்கள் வீட்டுச் சூழலுக்கு ஏற்ற பூச்செடிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் பலருக்கு விருப்பமான செடியாக முல்லைச் செடி இருக்கிறது. முல்லைச் செடியில் அதிகமான பூக்களை பூக்கச் செய்வதற்கு ஒரு கரைசலை தயாரித்து உபயோகப்படுத்தலாம்.
இதற்காக, 100 கிராம் கடலை புண்ணாக்கு மற்றும் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகிய இரண்டையும் மூன்று நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து புளிக்க விட வேண்டும். அதன் பின்னர், இவை இரண்டையும் நிறைய தண்ணீரில் கலந்து முல்லைப் பூ செடிக்கு ஊற்றலாம்.
இவ்வாறு செய்யும் போது சிறியச் செடியில் கூட அதிகமான பூக்கள் பூக்கும். குறிப்பாக, முல்லைபூ செடிகள் மட்டுமல்லாமல் அனைத்து விதமான செடிகளுக்கும் இந்தக் கரைசலை பயன்படுத்தலாம். மேலும், இரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.