விந்தணுவை அதிகப்படுத்தி விரைவாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்யலாம்.
முருங்கைப் பூவை பாலில் காய்த்து, அதில் சிறிதளவு ஜாதிக்காய் பொடி கலந்து 48 நாள்களுக்கு தொடர்ந்து குடிக்கலாம். இவ்வாறு செய்த பின்னர் பரிசோதனை செய்து பார்த்தால் விந்தணுக்கள் அளவு அதிகரித்திருக்கும்.
ஆல மரத்தில் இருக்கக் கூடிய பழம், விழுது, கொழுந்து ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை காயவைத்து பொடியாக்கி தேனில் கலந்து குடிக்கலாம். இதனையும் 48 நாள்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
சிலாசத்து பர்ப்பத்தை ஒருவரின் எடை மற்றும் பலத்தைக் கொண்டு 1 முதல் 3 கிராம் வரை, வேக வைத்த முட்டையின் உள்ளே வைத்து காலை நேரத்தில் சாப்பிடலாம்.
இவற்றை பின்பற்றுவதன் மூலம் விந்தணுக்கள் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.