மொறுமொறுப்பான தோசையை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால், அவற்றை தயாரிப்பது சில சமயங்களில் தந்திரமானதாக இருக்கலாம். குறிப்பாக மாவு இரும்பு தவாவுடன் ஒட்டிக்கொண்டால். தவாவை பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பரைக் கொண்டு கடுமையாக ஸ்க்ரப் செய்வதால், அதன் அமைப்பு பாதிக்கலாம். எனவே இந்த சிக்கலைத் தீர்க்கும் சில உடனடி ஹேக்குகளை நீங்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது?
ஊறவைத்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தோசை, ஒரு சிறந்த உணவு மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட, ஏனெனில் உளுத்தம் பருப்பு, புரதத்தின் நல்ல மூலமாகும்.
நீங்கள் ஹேக்குகளுக்குள் மூழ்குவதற்கு முன், இரும்பு தவாவில் சமைப்பதன் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
வார்ப்பிரும்பு பாத்திரங்கள் பாரம்பரியமாக சமையலுக்கு சிறந்ததாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. டெஃப்ளான் மற்றும் நான் –ஸ்டிக் பாத்திரங்கள் இயற்கையில் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அதிலிருக்கும் ரசாயனங்கள் உங்கள் உணவில் அட்டைப் போல ஓட்டிக் கொள்ளும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
இப்போது, ஹேக்குகளுக்குச் செல்லுங்கள்.
உங்கள் இரும்பு தவா நான் ஸ்டிக் போல் செயல்படுவதை உறுதி செய்ய" மூன்று எளிய வழிகள் உள்ளன.
தவாவின் மேற்பரப்பில் எண்ணெயில் ஊறவைத்த வெங்காயத்தை தேய்க்கவும். இதனால் தவா மிகவும் க்ரீஸ் ஆகிவிடும் என்பதால் தோசை மேற்பரப்பில் ஒட்டாமல் இருக்கும்.
உங்கள் தவாவை எப்போதும் சுத்தம் செய்த பிறகு ஒரு துணியால் துடைத்து, 2-3 சொட்டு எண்ணெய் தடவவும், அது க்ரீஸாக இருப்பதை உறுதிசெய்யவும்.
உங்களிடம் சரியான தோசை மாவு இருப்பதை உறுதி செய்வதற்கான உதவிக்குறிப்புகள்!
நீங்கள் புதிதாக மாவுத் தயாரிக்கிறீர்கள் என்றால், பொருட்களின் அளவு குறித்து கண்டிப்பாக கவனம் செலுத்துங்கள்.
நான்கு கப் அரிசி மற்றும் ஒரு கப் உளுத்தம் பருப்பை சுமார் நான்கு மணி நேரம் அல்லது ஒரு இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸி அல்லது மாவு கிரைண்டரில் அரைக்கவும்.
இட்லி தயாரிக்க பயன்படுத்தும் புழுங்கல் அரிசி மாவுதான் தோசைக்கும் வேலை செய்கிறது. மாவு அரைத்த பிறகு, சுவைக்கேற்ப கல் உப்பு சேர்க்கவும்.
மாவு கொரகொர டெக்ஸ்ட்ச்சரில் இருப்பதை உறுதிப்படுத்தவும். வெளியில் இருந்து வாங்கும் போது, தோசை மாவை குறைந்தளவு அல்லது தேவைக்கேற்ப மட்டுமே வாங்கவும். ஏனெனில் அதில், சமையல் சேர்க்கைகள் இல்லாமல் இருக்கும்.
மாவு பொதுவாக ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும், அதன் பிறகு புளித்துவிடும். இருப்பினும், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உடன் ஒப்பிடுகையில், மாவை காற்று புகாத பிளாஸ்டிக் அல்லது பீங்கான் கொள்கலனில் சேமித்து வைத்தால், அது நீண்ட காலம் நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், சமைப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அதை எடுத்து வெளியே வைக்கவும்.
இப்போது, நான்-ஸ்டிக் தவாவில் மாவை ஊற்றுவதற்கான நேரம் இது. தவா போதுமான அளவு சூடாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும். அதன் மேல் சிறிது தண்ணீர் தெளிக்கவும். சலசலக்க ஆரம்பித்தால், தவா போதுமான அளவு சூடாக இருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் தோசை தயாரிக்க ஆரம்பிக்கலாம்.
தவாவில் சிறிது எள் எண்ணெய் தடவலாம். அரை வெங்காயத்தை தவாவில் சமமாக எண்ணெய் பரப்ப பயன்படுத்தலாம். சாஸ் லேடலை(மாவு ஊத்தும் கரண்டி) பயன்படுத்தி, கடாயின் மையத்தில் தொடங்கி, மெதுவாக ஒரு வட்ட வடிவத்தில் மாவை பரப்பவும்.
1 டீஸ்பூன் எண்ணெயை தோசையின் நடு மற்றும் ஓரங்களில் ஊற்றி ஒரு நிமிடம் விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருங்கள். வெளிப்புற விளிம்புகளிலிருந்து மெதுவாக அதை எடுத்து திருப்பி போடவும். மொறுமொறுப்பான தோசை பரிமாற தயார்!
அல்ட்ரா மொறுமொறுப்பான தோசைக்கு, இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்து, பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் நீண்ட நேரம் சமைக்கவும். பின்னர் மறுபுறம் திருப்பவும்.
சட்னி, இட்லி பொடி, நெய் அல்லது வெல்லத்துடன் உங்கள் தோசையை உண்டு மகிழுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.